“உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா- அப்பாவைப் பிடிக்குமா?
இது பொதுவாக சிறு குழந்தைகளிடம் நாம் கேட்கின்ற கேள்வி.
அதற்கு பெரும்பாலான குழந்தைகள் “எனக்கு அம்வையும் அப்பாவையும் பிடிக்கும்“ என்று தந்திரமாகப் பதில் கொடுப்பர்.
சில குழந்தைகள் அம்மாவைச் சுட்டிக்காட்டும்- வேறு சில குழந்தைகள் அப்பாவைக் சுட்டிக்காட்டும்.
குழந்தைகளுக்கு சில வேளைகளில் யாராவது ஒருவர் மீது அதிக பாசம் இருந்தால் கூட பெரும்பாலான குழந்தைகள் அதை வெளிக்காட்டுவதில்லை.
இதே கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுப் பாருங்கள்.
அவரிடம் அம்மா அப்பா பற்றி கேட்க வேண்டாம்.
இந்தியாவை அதிகம் பிடிக்குமா- சீனாவை அதிகம் பிடிக்குமா என்று கேளுங்கள்.
அவர் மிகத் தந்திரமாகச் சொல்வார்- இரண்டுமே எமக்கு நெருங்கிய நட்புநாடுகள் என்று தான்.
ஆனால் அதில் உண்மை இல்லை.
பல சமயங்களில் அவர் இந்தியா எங்களின் சகோதரன். சீனா எமது உறவினர் என்று கூறியிருந்கிறார்.
இதன் மூலம் சீனாவை ஒரு அடி பின்னே தள்ளி வைத்திருப்பது போலக் கூறினாலும்- அவரது உண்மையான நெருக்கம் சீனாவுடன் தான்.
இது ஒன்றும் இந்தியாவுக்குத் தெரியாத இரகசியம் அல்ல.
இந்தியாவும் சீனாவும் சிறிலங்காவில் கால் வைக்கப் போட்டி போடுகின்ற நிலையில், மகிந்த ராஜபக்ஸவினதும் அவரது அரசினதும் முதற் தெரிவு என்றால் அது சீனாவாகவே உள்ளது.
பல சந்தர்ப்பங்களில் சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டு நோக்கும் போது சீனாவே சிறந்த நண்பன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும்.
இந்தியா பிராந்திய வல்லாதிக்க சக்தி.
அதற்கும் இலங்கைக்கும் இடையில் பூர்வீகத் தொடர்புகள் உள்ளன.
இந்தியாவின் தென்கோடியில் வாழும் வலுவான மக்கள் கூட்டமான தமிழர்களின் வழி வந்தவர்கள் சிறிலங்காவிலும் வாழ்கிறார்கள்.
இதுதான் சிறிலங்காவுக்கு சிக்கலானதொரு விடயம்.
தமிழர்கள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் தான் நினைப்பது போல எதையும் செய்ய முடியாதுள்ளது.
இந்தியா விரும்பாத எதையும் சிறிலங்காவினால் அங்கு செய்ய முடியாது.
இதுபோன்ற நெருக்கடியை சீனா கொடுப்பதில்லை.
சிறிலங்காவில் எந்த இனத்தவர்கள் வாழ்கிறார்கள், என்ன மொழி பேசுகிறார்கள், எந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்றெல்லாம் அது பார்க்கவில்லை.
சிறிலங்காவின் உள்வீட்டுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பதும் இல்லை.
சீனாவின் ஒரே குறி சிறிலங்காவில் வர்த்தக நலன்களை விரிவாக்கிக் கொள்வதும்- இந்தியாவுக்கு எதிரான இராணுவ நலன்களை தக்க வைத்துக் கொள்வதும் தான்.
சிறிலங்காவில் மனிதஉரிமைகள் மீறப்பட்டாலும் சரி- போர்க்குற்றங்கள் நடந்தாலும் சரி- அதையெல்லாம் கண்டு கொள்ளாத நண்பனாக சீனா இருந்து வருகிறது.
ஆனால் இந்தியா அப்படி இல்லை- சீனாவைப் போல அதனால் இருக்கவும் முடியாது.
ஏனென்றால் தெற்காசியாவின் காவல்காரனாக இந்தியா இருக்கிறது.
சிறிலங்காவில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவையும் பாதிக்கிறது. எனவே இந்தியாவால் அப்படி இருக்க முடியாது.
ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தலையீடுகளை அது விரும்பவில்லை.
இது அடிப்படையில் இருந்தாலும் இந்தியாவுடனான நட்புறவு தொடர வேண்டும் என்று நினைக்கிறது.
இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அது விரும்பவில்லை.
அதனால் தான் இந்தியாவை சகோதரன் என்று சொல்லும் மகிந்த ராஜபக்ஸ சீனாவை உறவினர் என்கிறார்.
சகோதரன் தட்டிக் கேட்பான். உறவினன் அப்படியல்ல. எட்ட நின்று பார்த்துக் கொள்வான்.
அருகே இருக்கும் சகோதரனாக இந்தியா இருந்தாலும் தொலைவில் இருக்கும் உறவினன் மீதே சிறிலங்காவுக்கு காதல் அதிகம்.
அதனால் தான் சீனாவில் விரைவில் மூன்றாவது துணைத் தூதரகத்தையும் சிறிலங்கா திறக்கவுள்ளது.
பெய்ஜிங்கில் தூதரகத்தைக் கொண்டுள்ள சிறிலங்காவுக்கு சங்காய் நகரிலும், சிசுவான் மாகாண தலைநகர் செங்டுவிலும் இரண்டு துணைத் தூதரகங்கள் இருக்கின்றன.
இப்போது மூன்றாவதாக குவாங்டொங் மாகாணத்தின் தலைநகர் குவாங்சோவிலும் புதிய தூதரகத்தை சிறிலங்கா அமைக்கவுள்ளது.
இது சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகள் எந்தளவுக்கு நெருக்கமடைகிறது என்பதற்கு ஒரு உதாரணம்.
சிறிலங்காவில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களுக்கு உடனடியாகவே அனுமதி வழங்கப்பட்டு விடுகிறது.
சீனாவின் திட்டங்கள், முதலீடுகளுக்கு சிறிலங்கா அமைச்சரவை உடனடியாகவே அங்கீகாரம் கொடுத்து விடுகின்றன.
புரிந்துணர்வு உடன்பாடுகள் விடயத்திலும் இழுத்தடிப்புகள் இடம்பெறுவதில்லை.
ஆனால் இந்தியாவுக்கு அப்படியான நிலை இல்லை.
சீனாவின் முதலீடுகள், தலையீடுகளால் இந்தியா மிரண்டு போய்- போட்டியாக களத்தில் இறங்கினாலும், சிறிலங்கா பல்வேறு தடைகளைப் போட்டுக் கொண்டே வருகிறது.
போருக்குப் பிந்திய மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக இந்தியா பெருமளவு உதவிகளை வழங்க முன்வந்தது.
சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைக்கவும் முன்வந்தது.
இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டு நான்கு வருடங்களாகின்றன.
ஆனால் இன்னமும் அதற்கான புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை.
புரிந்துணர்வு உடன்பாட்டை தயாரித்து சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா.
சட்டமா அதிபரின் பரிசீலனைக்கான அதை அனுப்பியது சிறிலங்கா அரசாங்கம்.
அதில் 90 சந்தேகங்களுக்குப் பதிலளிக்குமாறு கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்பினார் சட்டமா அதிபர்.
இன்னமும் இந்த இழுபறி நீடிக்கிறது.
இப்போது என்னவென்றால் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் விலையை நிர்ணயம் செய்வதில் பிரச்சினை தீரவில்லை என்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
சம்பூர் அனல்மின் திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதை சிறிலங்கா இழுத்தடிக்கிறது என்பதே உண்மை.
அதுபோல, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதி மக்களுக்காக 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்தது.
இந்த உதவியை இந்தியா அறிவித்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது.
மழைகாலம் முடிந்ததும் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 1000 வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக புதுடெல்லியில் இருந்து அரியாலைக்குப் பறந்து போனார் இந்திய வெளிவிவகார அமைச்சர்.
அடிக்கல் நாட்டப்பட்ட அந்த இடத்தில் புல் முளைத்து பற்றைகள் படரத் தொடங்கி விட்டன.
காரணம் சிறிலங்கா அரசாங்கம் இது பற்றிய புரிந்துணர்வு உடன்பாட்டை இன்னமும் செய்து கொள்ளவில்லையாம்.
49,000 பயனாளிகளைத் தெரிவு செய்யவும் சிறிலங்கா தவறியுள்ளது.
இதனால் 50,000 வீடுகளை கட்டுவதற்காக இந்தியா ஒதுக்கிய நிதி வங்கியில் கிடந்து காய்கிறது.
போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் வெயிலில் காய்ந்து- மழையில் நனைந்து- வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
இதுபோல இந்தியாவின் பல திட்டங்களுக்கு சிறிலங்கா தடை போட்டு வைத்திருக்கிறது.
இதெல்லாம் இந்தியாவுக்கு வெறுப்புத் தான். ஆனாலும் அது சமாளித்துக் கொண்டு போகிறது.
சீனாவின் வலையில் சிறிலங்கா முழுமையாக சிக்கி விடக் கூடாது என்பதே இந்தியாவின் கவலை.
இதனால் தான் இந்தியா அதிகம் பொறுமை காக்கிறது.
அரசியல்தீர்வு விடயத்தில் இந்தியாவின் விருப்பங்களையும் கூட சிறிலங்கா கருத்தில் எடுக்கும் நிலையில் இல்லை.
ஆனால் சீனா சொல்லும் அனைத்துக்கும் சிறிலங்கா தலையாட்டிக் கொள்கிறது.
சீனா அறிவிக்கும் முதலீடுகளுக்கு உடனடியாகவே அனுமதி கிடைக்கிறது.
இதற்கெல்லாம காரணம் சீனா வாரி இறைக்கும் நிதியுதவியும் – அழுத்தம் கொடுக்காத போக்கும் தான்.
இதனால் தான் சிறிலங்கா எப்போதும் சீனாவின் நட்பை பலப்ப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
இது இந்தியாவுக்குப் பிடிக்காது போனாலும் என்ன செய்வது சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் கருதி அது பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
முகிலன்
ஈழநேசன்

0 Responses to மகிந்தவின் காதல்