விடுதலைப் புலிகளுக்கு அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள்சபை செயலாளர் நாயகம் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்து முன்னர் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் ஐ.நா. சபையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி இம்மாத இறுதியில் இலங்கை அரசிடம் குறிப்பிட்ட அறிக்கை கையளிக்கப்பட உள்ளது என அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிவிவகாரச் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கடந்த 23ஆம் திகதி ஐ.நா.தலைமையகத்தில் பான் கீமூனைச் சந்தித்து இரகசிய பேச்சுகளை நடத்தியபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் அதனை ஐ.நா. ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனிடம் கையளிக்கப்படவிருந்தது. இலங்கை அரசின் கோரிக்கையையடுத்தே அறிக்கை சமர்ப்பிப்பது ஒரு மாதத்துக்கு பிற்போடப்பட்டது.
இதேவேளை, இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் அது குறித்து தனது கருத்துகளைத் தெரிவிப்பதற்காக அதனை தம்மிடம் வழங்கவேண்டும் என ஐ.நா. சபையை இலங்கை கேட்டுள்ளது. இதனை அடுத்தே மாத இறுதியில் அது இலங்கை அரசிடம் கையளிக்கப்பட உள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம் பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவென ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு இலங்கைக்கு வருகை தர அரசு அனுமதி மறுத்திருந்தது தெரிந்ததே.
இதேவேளை, நிபுணர் குழுவின் அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதும் அவர் ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் இந்த அறிக்கை தொடர்பாக உத்தியோகப்பற்றற்ற பேச்சுகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஐ.நா. குழுவின் அறிக்கை: பகிரங்கப்படுத்த முன் தம்மிடம் ஒப்படைக்க இலங்கை கோரிக்கை