போர்க்குற்றவாளியின் சொந்த ஊரான தங்காலையை அடுத்துள்ள அம்பலாந்தோட்டை பிரதேசத்திலேயே அவ்வாறு போர்க்குற்றவாளியின் கட்டவுட் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அத்தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அம்பலாந்தோட்டை சந்தியில் வைக்கப்பட்டிருந்த போர்க்குற்றவாளியின் உருவ அளவான கட்டவுட் ஒன்றே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போர்க்குற்றவாளியின் கட்டவுட் உடன் அப்பகுதி அபேட்சகர் ஒருவரின் கட்டவுட்டும் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரஸ்தாப அபேட்சகரின் கட்டவுட்டுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை என்றும் அறிய முடிகின்றது.
அந்த வகையில் போர்க்குற்றவாளி மீதான தனிப்பட்ட அதிருப்தியே அவரது கட்டவுட் தீக்கிரையாக்கப்பட்டதற்கான காரணம் என்பதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.



0 Responses to போர்க்குற்றவாளியின் ஊரிலேயே அவரது கட்டவுட் தீக்கிரை