இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் சனல்4 ஊடகத்திற்கு சாட்சியங்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
துர்நடத்தை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்களே தகவல்களை வழங்கியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இந்த இரண்டு முன்னாள் இராணுவச் சிப்பாய்களும், சனல்4 ஊடகத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.
புதுமாத்தளன் பிரதேசத்தில் இராணுவ உத்தியோகத்தர்களை அழைத்து பொதுமக்களை தாக்குமாறு உத்தரவிட்டதாக குறிப்பிடப்படும் தகவல்களில் உண்மையில்லை என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சனல்4 காணொளி தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் கிடையாது என தமது வாதத்தை முறியடிக்கும் நோக்கில் இவ்வாறு ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை சனல்4 முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் சனல் 4 ஊடகத்திற்கு சாட்சியமளித்துள்ளனர்: திவயின
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 July 2011



0 Responses to இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் சனல் 4 ஊடகத்திற்கு சாட்சியமளித்துள்ளனர்: திவயின