உள்ளுராட்சித் தேர்தலை அடுத்து வடபகுதியில் உள்ள தமிழ் அரச ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்குகளை அளித்த தமிழ் அரச ஊழியர்களையும், சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களையும் பழிவாங்குவதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஈடுபட்டிருப்பதாகவும், யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆசிரிய தொழிற்சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் துணைபோவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விபரங்களை அவர் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக இந்த ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆவணங்கள் கையளிக்கப்பட்டதையடுத்து அரச அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண ஆளுனர் ஈடுபடுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலில் தாம் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் விக்னேஸ்வரன் கட்டாய ஓய்வில் அனுப்பட்டுள்ளார். வடமாகான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய சம்மேளனத்தினருமே அதிகமாக அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பல கல்வி வலய அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு, இதனால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயிற்சி நடவடிக்கைகளுக்காக வந்துள்ள தென்னிலங்கை சிங்களவர்களைக் கொண்டு நிர்வாக சேவை வெற்றிடங்கள் நிரப்பலாம் என்ற யோசனைகளும் இமெல்டாவால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
அதிர்வு



0 Responses to இமெல்டாவின் காட்டிக்கொடுப்பு: அம்பலமாகும் செய்திகள்!