Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உங்களுக்கு ஒரு விடையம் செல்லவேண்டும். தற்போதுவரை யாழில் உள்ள பாடசாலை அதிபர்கள், கைகளில் பேனாவையும் பேப்பரையும் கொண்டு திரியாமல் ரிப்பனுன் கத்திரிக்கோலுமாக அலையவேண்டி உள்ளதாம்! ஏன் என்று கேட்கிறீர்களா வாசியுங்கள்....

பெரும் பிரச்சாரத்துடன் அரச உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கான கால எல்லை முடிவுற்றதை அடுத்தே குடாநாடு அமைதியாக உள்ளது என்கிறார்கள். நேற்றைய தினம் மட்டும் யாழ்க்குடா நாட்டில் 36 பாடசாலைகளில் கட்டிடங்கள் அவசர அவசரமாக அமைச்சர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்றால் நம்ப முடியுமா உங்களால்? சமையல் அறையிலிருந்து விஞ்ஞான அறைகள் என எல்லா அறைகளுக்கும் முன்னர் ஒரு ரிப்பனைக் கட்டிவிட்டு அதனைக் கத்திரிக்கோல் கொண்டு வெட்டி, அரசாங்கம் ஒரு தெருக்கூத்தை நடத்தி முடித்துள்ளது.

நேற்றுக் காலை யாழ் நகரப் பகுதியிலுள்ள 2 பாடசாலைகளை ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் திறந்து வைக்க மதிய வேளை பிரதிஅமைச்சர் கருணா மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் அதே பாடசாலையை மீண்டும் திறந்து வைத்த வேடிக்கையான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதாவது திறந்துவைக்க ஏதாவது வேண்டும் அல்லவா? அதனால் பாடசாலைகளின் அறைகளைக் கூட இவர்கள் திரும்பத் திரும்ப திறந்துவைக்கிறார்கள் என்றால் பாருங்களேன்!

யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் அமைந்துள்ளது நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம். மற்றைய நல்லூர் சாதனா பாடசாலையாகும். நேற்றுக் காலை 8.30 மணியளவில் அங்கு சென்ற ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயன் அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை தான் திறந்து வைக்கப் போவதாகத் தெரிவித்தார். இதையடுத்து பாடசாலை மாணவர்களின் வரவேற்பாடுகளுடன் அந்தக் கட்டிடங்களை அவர் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஏற்றி மங்கள விளக்கேற்றி ரிப்பனை வெட்டித் திறந்து வைத்தார்.

அவர் சென்று சுமார் 1 மணி நேரத்தின் பின்னர் அமைச்சர்களான ஹிஸ்புல்லா மற்றும் பிரதி அமைச்சரான கருணா ஆகியோர் அங்கு சென்று அந்தப் பாடசாலைக் கட்டிடங்களை தாங்கள் திறப்பதற்காக வந்திருப்பதாக அறிவித்ததை அடுத்து பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் திண்டாடிப் போனார்களாம். மீண்டும் மாணவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டனர். மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது (இலங்கை தேசியகொடி). விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் எரிக்கப்பட்டன. புதிதாக ரிப்பன் கட்டப்பட்டு அவை மீண்டும் துண்டிக்கப்பட்டன. என்ன கொடுமை. தற்போது எல்லாம் பாடசாலைகளில் உள்ள அதிபர்கள் ரிப்பனும் கத்திரிக்கோலுமாகவே நடமாடவேண்டியுள்ளதாம்.

யார் எந்தநேரத்தில் வந்து எதைத் திறந்துவைக்கப்போகிறார்கள் என்று தெரியாத ஒரு நிலை காணப்படுகிறது. டக்ளஸ், கருணா, ஹிஸ்புல்லா கோஷ்டியினர் திறந்துவைக்காத ஒரே ஒரு அறைதான் உள்ளது. அதுதான் மலசலகூட அறை. சான்ஸ் கிடைக்கும் என்றால் அதற்கும் ரிப்பன் கட்டி கத்திரிக்கோலால் வெட்டி இருப்பார்கள் இந்த மானம்கெட்ட ஒட்டுக்குழுக்கள்!

அதிர்வு

0 Responses to சான்ஸ் கிடைத்தால் மலசல அறையைக் கூட ரிப்பன் கட்டி திறந்திருப்பார்களோ?

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com