Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தியோகபூர்வ ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிந்திக்கிடைத்த தகவல்களின் பிரகாரம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட 16 உள்ளுராட்சி சபைகளில் 3 நகரசபைகள் உட்பட 14 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வேலணை, நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னணியில் நிற்பதாக யாழ். தேர்தல் திணைக்கள வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரினால் தேர்தல் ஆணையாளருக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனினும் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

உத்தியோக பூர்வ அறிவிப்புக்கள் பெரும்பாலும் நாளை காலை தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான முடிவுகள் குறித்து அறிய முடியாமலிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போட்டியிட்ட கட்சிகளின் நிலைவரம்:

யாழ்ப்பாண மாவட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, காரைநகர் பிரதேச சபை, வலிகாமம் வடக்கு ஆகிய பிரதேச சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பும் நெடுந்தீவு பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும்,

ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும்

சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

246 வாக்குகள் செல்லுபடியற்றவை.

வலி.கிழக்கு தொகுதிக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நான்கு பிரிவுகளாக இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் வாக்கெண்ணும் நிலையம் ஒன்றில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையிலான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

கோப்பாய்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 4390

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1514

ஐக்கிய தேசியக் கட்சி - 39

ஜே.வி.பி - 4

செல்லுபடியற்ற வாக்குகள் - 500

நெடுந்தீவு பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1609 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 216 வாக்குகளைப் பெற்று 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி 83 வாக்குகளை மட்டும் பெற்றது. ஆசனம் எதுவும் இல்லை.

செல்லுபடியற்ற வாக்குகள் 102

முல்லைத்தீவு மாவட்டம்

துணுக்காய் பிரதேச சபை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2198 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்கள்

பிரஜைகள் முன்னணி 847 வாக்குகளைப் பெற்ற 2 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டம்

திருக்கோவில் பிரதேச சபை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 6860 வாக்குகள்

பொதுசன ஐக்கிய முன்னணி - 1239 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 497 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி - 810 வாக்குகள்

உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத இத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாகவுள்ள 9 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 7 ஆசனங்கள் கிடைக்கும்.

காரைதீவு பிரதேச சபை

தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4292 வாக்குகள்

முஸ்லிம் காங்கிரஸ் - 2359 வாக்குகள்

பொதுசன ஐக்கிய முன்னணி - 1050 வாக்குகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 165 வாக்குகள்

இந்த தேர்தல் முடிவு உத்தியோக பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மொத்தமாகவுள்ள 5 ஆசனங்களில் த.தே.கூட்டமைப்புக்கு 3 அல்லது 4 ஆசனங்கள் கிடைக்கும்.

0 Responses to வல்வெட்டித்துறை நகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com