பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு இந்திய நீதிமன்றம் விதித்துள்ள மரணத் தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. .
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூவருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இம்மூவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், உலகின் சகல மரணத் தண்டனை விதிப்புக்களுக்கும் எதிர்ப்பை வெளியிடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
பொதுமன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு 11 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், இது மனிதாபிமானமற்ற செயலாகும் என்றும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு!