முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஈழத்தமிழர்கள் பல லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் வாழ்க்கை நசுக்கப்பட்டுள்ள நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது என்று கூறினார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுள் தண்டனையையும் விட அதிகமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், அவர்களின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது கண்டனத்திற்குரியது.
இதற்கு முன்னர் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் தூக்கு தண்டனை கருணை மனுக்களை தள்ளுபடி செய்யவில்லை என்றும் கூறிய திருமாவளவன், தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்ப்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
KALAIMARAN FROM JAFFNA, TAMILEELAM
DONT SPEAK MAN , DO ANYTHING YOU ARE THE FRIENDS OF CONGRESS, BECOUSE STILL YOU R LIVING IN DMK ALLEGIANCE FOR CONGRESS POLITICAL BENEFITS,YET YOU TRY TO CHEAT OUR INNOCENT PEOPLE
HERE BELOW YOUR PAST RECORDS
* DESTROYED NATION OF TAMILEELAM
{ KILLED MORE THAN 150000 PEOPLES }
* DISPOSED THEIR POLITICAL FUTURE {DEFEA OF LTTE }
* DISPLAYED 400000 PEOPLES FROM OWN RESIDENTS
ALL ARE YOUR PAST CRIMINAL RECORDS
ALL THESE YOU DONE WITH DMK & CONGRESS
ACCORDING THIS YOU ALSO WAR CRIMINAL , YOU SHOULD BE INVESTIGATED WITH RAJAPAKSE , KARUNANITHI & SOMIA BY INTERNATIONAL COMMUNITY
YOU DONT PRETEND AS A INNOCENT OK