எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையிட்டதாகவும், ஒருவரை தாக்கியதாகவும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் மீது இங்கிலாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
26 வயதான இலங்கை தமிழ் அகதியே இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு குறுஞ்செய்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி தென்மேற்கு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அகதி தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
அதேநேரம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, கிங்ஸ்டன் க்ரௌன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி தொடரவுள்ளது.
0 Responses to லண்டனில் இலங்கைத் தமிழருக்கு எதிராக கொள்ளைக் குற்றச்சாட்டு