மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாக நக்கீரனில் வெளியான செய்தியே அதிமுகவினரை ஆத்திரமடைய வைத்து, அதன் அலுவலகம் மீது தாக்குதலை நடத்த வைத்துள்ளது.
சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு பின்னர் ஜெயலலிதா, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதாக கூறி, இன்று வெளியான நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டிருந்தது. :
“ஜெ.வுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர்களின் பேச்சு, சசிகலா விவகாரம் பற்றித் திரும்பியுள்ளது. அதை விரும்பாத ஜெயலலிதா, ”அதைப்பற்றி பேசாதீங்க.நான் தவறான விதையை விதைச்சிட்டு விஷத்தை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கேன்” என்று சொல்லிவிட்டு, கலைஞர் மீதும், வீரமணி மீதும் கோபத்தைத் திருப்பியிருக்கிறார்.
”இவங்க இரண்டு பேரும்,என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னு பிரச்சாரம் பண்ணுறாங்க.அதாவது நான் மாமியாம்.. என் கூட இருக்கிறவங்க மாமிகள் அதிகமுள்ள மயிலாப்பூர் மாஃபியாவாம். இந்த விமர்சனம் எம்ஜிஆர் காலத்திலேயே கட்சிக்குள்ளே வந்தது.அப்ப அவர் என்ன சொன்றார் தெரியுமா?”என்று தன் முன்னே இருந்தவர்களைக் கேட்டுவிட்டு,அந்த சம்பவத்தை விளக்க ஆரம்பித்திருக்கிறார் ஜெயலலிதா.
”நான் அரசியலுக்கு நுழைஞ்ச நேரம் அது.எம்ஜிஆர் என்னைக் கூப்பிட்டு, இனி தன்னால ஊர்ஊரா சுற்ற முடியாதுன்னும், கருணாநிதிக்குப் போட்டியா ஜானகியை கொண்டு வர முடியாதுன்னும் சொல்லி,அம்முதான் சரியான ஆள்னு என்னைக் காட்டி,கட்சி நிர்வாகிகள் கிட்டே சொன்னார்.
அதோடு, கொள்கை பரப்புச் செயலாளர் பதவியையும் கொடுத்தார். கே.ஏ.கே., எஸ்.டிஎஸ். போன்றவங்க கடுமையா எதிர்த்தாங்க. அப்ப பொன்னையன் இருந்தாரு.அவரு, ‘நம்ம கட்சியும் திராவிட இயக்கம்ங்கிற அடையாளத்தோடு இருக்கு.இதனோட கொள்கையை பரப்ப ஒரு பிராமினை நியமிக்கிறது சரியா இருக்காது’ன்னு சொன்னார்.
அப்ப எம்ஜிஆர் ‘நீங்க அம்முவை பிராமின்னு நினைக்கிறீங்களா? பிராமின்னா குழைஞ்சு குழைஞ்சு பேசி காரியம் சாதிப்பாங்க. அம்மு எதையும் பட்பட்டுன்னு நேரில் பேசிடும்.
அப்புறம்,இங்கே இருக்கிற நீங்க யாரும் மாட்டுக்கறி சாப்பிட்டிருக்க மாட்டீங்க. ஆனா, அம்மு ஸ்பென்சரிலிருந்து ஸ்பெஷல் பீஃப் வாங்கி எனக்கு சமைச்சிக் கொடுத்திருக்கு. நான்தான் பழக்கமில்லாததால அதை சாப்பிடலை.மாட்டுக்கறி சாப்பிடுற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க’ன்னு சொன்னார்.
இன்னைக்கு கருணாநிதியும்,வீரமணியும் நான் பிராமின்னும் என் கூட இருக்கிறவங்களை மயிலாப்பூர் மாஃபியான்னும் சொல்றாங்க”என்றபடி சிரித்திருக்கிறார்”
நக்கீரன் வெளியிட்ட மேற்கூறிய செய்தியே அதிமுகவினரை ஆத்திரமூட்டி, அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்த வைத்துள்ளது.
கோபால் அண்ணர் சும்மா பத்திரிக்கை விற்பனைக்காக அப்படி செய்தார்.அ.தி .மு.க. கட்சி விளம்பரத்திற்காக இப்படி செய்கிறார்கள் அவ்வளவுதான்.மக்கள் தான் பாவம் எப்பொழுதும்.
ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என எழுதியது பாரதூரமான பிரச்சனை அல்ல.அவரும் அதை அறிவர்.அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களை படித்தவர். அது அவரின் இமேஜை மக்கள் மத்தியில் பாதிக்கும் என்பதே பிரச்சனை.இன்றைய பிராமணர்களின் முன்னைய பிரதான தொழில் ஆடுமாடுகளை வெட்டி பலி செலுத்தி அதை புசிப்பதும் குடிப்பதுமாகும். இதனை பிறர் சமூகத்தினர் செய்ய அக்காலங்களில் அனுமதி இல்லை. ஆசாரியர்களான அவர்கள் மாத்திரம் இப்படி பலி செலுத்தும் உரிமையினை அந்தந்த நாடுகளின் அரசுகள் வழங்கிஇருந்தமை சரித்திரம் மூலம் அறிய முடிகிறது. அவர்கள் குதிரை இறைச்சியை தின்று எலும்புகளை வீசியபடியே இந்தியாவுக்குள் நுழைந்ததாக சரித்திரம் சொல்கிறது.
pramanargalin mudhal kotpaade agimsaithaan athai purinthu kondu piragu karuththukkalai pathiyungal