நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்டதாகக் கூறி நக்கீரன் பத்திரிகை பிரதிகளை மாநிலம் முழுக்க எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து எதுவும் வெளிப்படையாக கருத்து கூறவில்லை.
இந்த நிலையில், நக்கீரன் அலுவலகத்தின் மீது இன்று அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும், நக்கீரன் பிரதிகளை தீயிட்டுக் கொள்ளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதிமுகவினரின் இந்த செயலுக்கு திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக நாட்டில் இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை சட்டப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அரசு இதுபோன்ற செயல்களை வேடிக்கைப் பார்க்கக் கூடாது”, என அவர் கூறியுள்ளார்.
0 Responses to நக்கீரன் மீது தாக்குதல்- கருணாநிதி கண்டனம்