Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானால், தாம் 11 வருடங்களாக மேற்கொண்ட அனைத்து காரியங்களும் அழிந்துப்போய் விடும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தாம் பதவியில் இருந்து விலகிச்செல்லும் போது, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி ராஜதந்திரிகளுக்கு வழங்கிய விருந்துபசாரத்தின் போதே சந்திரிகா இந்த கருத்தை வெளிப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவலை அமெரிக்காவின் அப்போதைய தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு கேபிள் மூலம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

தாம் ஒருவேளை வீதியில் வாழவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் சந்திரிகா இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை விரும்புவதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் சந்திரிகா இதன்போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அப்போது (2005) வசித்த மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரான இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர், படைகளில் இருந்து தப்பிவந்த 300 படையினரைக் கொண்டு யாழ்ப்பாணத்தின் தேர்தல் பணிகளுக்காக செல்லவிருந்ததாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சந்திரிகா குறித்த விருந்துபசாரத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க,தேர்தலில் வெற்றிப்பெற்றால் தமது பொதுவாழ்க்கை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் சந்திரிகா இதன் போது குறிப்பிட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to மஹிந்த ஜனாதிபதியானால் தாம் வீதியில் வாழவேண்டிய நிலை ஏற்படும்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com