போருக்குப் பின்னரான யாழ்ப்பாணத்து களநிலமைகளை அறிந்து கொள்வதற்காக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு மாலை 5 மணிக்கு வந்து இறங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் அவரது குழவினரை யாழ். மாவட்ட அரச அதிபர் இமர்டா சுகுமார் வரவேற்றர். யாழ்.அரச அதிபரைச் சந்திக்க வந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு வடமாகாண ஆளுநர் சந்திர சிறி கூறியுள்ளார்.
ஆனால் இமெல்டாவோ அதனை மதிக்காது தனது அலுவலகத்துக்கு அவர்களைக் கொண்டுபோய் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சந்திரசிறி. இனிமேல் வெளிநாட்டு ராஜதந்திரகள் வந்தால் உங்கள் அலுவலகம் கூட்டிக் கொண்டு போய் பேச்சுவார்தை நடத்தக் கூடாது எனவும் என் முன்னிலையில் பேசுங்கள் என கடும் தொணியில் கர்ச்சித்துள்ளார்.
அரச அதிபரின் முகத்தில் "ஈ" கூட ஆடவில்லை. பின்னர் வடமாகாண அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் மற்றும் அவரது குழுவினரோடு மூடிய அறைக்குள் பேச்சுவார்தை நடத்தினார் சந்திரசிறி. கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இமெல்டாவை சற்றும் கவனிக்காமல் அங்கிருந்து அகன்றுசென்றார் சந்திரசிறி.
0 Responses to மூடிய அறைக்குள் இமெல்டா! (படம் இணைப்பு)