மாதந்தை என தமிழ் மக்களால்அழைக்கப்படும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
தமிழினத்தை உலகில் தலைநிமிரவைத்த மைந்தனின் பெற்றோர் என்பதற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும், அவரது துணைவியார் பார்வதிப்பிள்ளை அவர்களும் வவுனியா முகாமில் வைத்து சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தள்ளாத வயதிலே சிறீலங்காவின் இரக்கமற்ற படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், அனைத்துலக விதிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து சாவடைந்தனர் என்பது தமிழ் மக்களை என்றும் துயரத்தில் துடிக்க வைக்கும் சோக நிகழ்வாகும்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் 2009அம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த வெளியேறி பொதுமக்களுடன் சேர்ந்து நடுவண தமிழீழம் ஓமந்தைப் பகுதிக்குச்சென்றபோது சிறீலங்காப்படையினரால் கைது செய்யப்பட்டு பனாகொடை முகாமில் தொடர்ந்து 8 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தாயகத்தில் நடாத்தப்பட்ட தமிழனப் படுகொலைக் காலங்களில் இறுதிவரை தமிழ் மக்களோடு வாழ்ந்து கைதாகி, உறவினர்களைக்கூட சந்திக்க முடியாமல், தடுத்து வைக்கப்பட்டு உரிய மருத்துவப் பராமரிப்புகளில்லாமல் சாவடைந்த இந்தப் பெருமகனின் சாவு இயற்கையானது என ஏற்க முடியாமலுள்ளது.
தமிழினத்தின் மீதும், தமிழீழத்தேசியத் தலைவர் மீதும் சிங்கள ஆதிக்கம் கொண்ட வெறித்தனமான கோபத்தின் அடையாளமாகவே திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு அநீதியான சாவு இழைக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் பனாகொட முகாமில் இறந்துவிட்டார் என சிறிலங்கா அரசாங்கம் காலம் தாழ்த்தி அறிவித்தது.
ஈழத்தமிழனத்தின் சொல்லொணாச் சோக வரலாறாக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவும் அமைந்து விட்டது.
தேசியத்தலைவர் அவர்களின் தந்தை உலகத் தமிழினத்தின் தந்தையாக என்றும் வரலாற்றில் நிலைத்து வாழ்வார்.
தொடர்புபட்ட செய்தி
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
07 January 2012
plzzzzzzzzzzz itha pakka vendam