"தமிழ் தேசிய தொலைக்காட்ச்சி" என்று இது "ஒரு மக்கள் தொலைக்காட்ச்சி" என்றும் தம்மை வர்ணித்த GTV தற்போது நாடு கடந்த தொலைக்காட்ச்சியாக மாறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். காரணம்... நாடு கடந்த அரசின் முக்கிய முள்ளியும் அமைச்சருமான திரு. தணிக்காச்சலம் தயாபரன் அவர்கள் GTV இன் பிரதம முகாமையாளராக தற்போது பதவி ஏற்றுள்ளார்.
நாடு கடந்த அரசின் அமைச்சர் ஒருவர் எவ்வாறு தமிழ் தொலைக்காட்ச்சி ஒன்றின் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க்க முடியும் என்பது ஒரு புறம் இருக்க இனி மற்றைய அமைப்புகள் நிலை என்ன என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. GTV இன் உள்ளகத் தகவல்கள் சில அதிர்வு இணையத்துக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் தயாபரனை சில தினங்களுக்கு முன்னர் அழைத்த GTV இன் லண்டன் நிர்வாகி கிருஷ்னா என்பவர் இது தொடர்பாக அவருடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியப்படுகிறது. அதிர்வு இணையமானது தயாபரன் அவர்களைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டபோது அவர் அதனை ஒப்புக்கொண்டு உள்ளார்.
நாடு கடந்த அரசில் முக்கிய அங்கத்துவம் வகிக்கும் ஒருவர் GTV போன்ற தொலைக்காட்ச்சியில் பிரதம முகாமையாளர் பதவியில் இருந்தால் அத்தொலைக்காட்ச்சி எந்த தமிழ் அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் என்பதில் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பிரித்தானியாவில் BTF GTF TYO TAG iii என பல அமைப்புகள் இயங்கிவருகின்றன.
ஏற்கனவே இவ்வமைப்புகளின் பல செயல்பாடுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்புகள் செய்யும் பல போராட்டங்களையும் போர்குற்றச்சாட்டு நடவடிக்கைகளையும் தாமே செய்தோம் என சில கோஷ்டிகள் உரிமை கூறியும் வந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஒரு அமைப்பைச் சார்ந்த நபரை GTV ஏன் உள்வாங்கவேண்டும்? அதுவும் அதி உச்ச பீட நிர்வாகத்தில் அவரை ஏன் அமர்த்தவேண்டும்? இவ்வாறு அமர்த்தப்பட்ட நபர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல் தன் கடமையைச் செய்வாரா? இவ்விடையத்தில் இவர் எவ்வளவு இதயசுத்தியோடு வேலைசெய்வார் என்பது போன்ற பல கேள்விகள் சாதாரன மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே பலராலும் விமர்சிக்கப்படும் GTV மேலும் பல புதிய சிக்கலுக்குள் தன்னை இட்டுச்செல்கிறது.
இத் தொலைக்காட்ச்சியானது மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து வருவதை சாதாரண மக்கள் பேசும் ஒவ்வொரு பேச்சிலும் உணர முடிகிறது.
வல்லிபுரத்தான்
அதிர்வு
இதில் சந்தேகமோ, ஆச்சரியமோ படுவதற்கு எதுவும் இல்லை. GTV தற்போது தமிழருக்கு நிலையான ஒரு தீர்வை பெற்று தரக்கூடிய அமைப்பை அடையாளம் கண்டு இணைத்துள்ளது. இது தமிழருக்கு ஒரு நல்ல ஆண்டு.(பி.கு:எல்லா ஊடகங்களுக்கும் , வேற்றுமையை வளர்க்காமல் (குற்றம் கண்டுபிடிப்பது) ஒன்றுபடுவதட்குரிய வழிமுறைகளை,கருத்துக்களை முன்வையுங்கள்)