Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவி லக்சினியினை வன்புணர்ச்சிக்குட்படுத்திக் கொடூரமாய் கொன்ற கொலைபாதகனுக்குத் தண்டனை வழங்குமாறு வேண்டுகொள் விடுத்துள்ளதுடன் ஐரோப்பாவைத் தளமாகக்கொண்டியங்கும் நெடுந்தீவிற்கான சர்வதேச இணையம்,மற்றும் குமுதினி இணையவலை காப்பகம் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

நெடுந்தீவு மகாவித்தியாலயமானது பல மகான்களை, நல்ல மனிதர்களை உலகிற்கீந்த உன்னத கல்விக்கூடம்.

பல இன்னல்களுக்கும் மத்தியில் கல்விப்பெரும் பேற்றை அள்ளிகொடுத்துக் கொண்டிருக்கின்ற அந்தக் கல்லூரியின் 8ம் தர மாணவி லக்சினியை சீரழித்து சித்திரவதைப்பட்டு காமுக வெறியனொருவாரல் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள் என்கின்ற ஈனச்செய்தி எம்மைத் திடுக்கிட வைக்கின்றது.



இது தொடர்பில் ஈ.பி. டி.பி யின் முன்னணி தளபதி நெப்போலியனின் வலது கரமென வர்ணிக்கப்படும் கிருபா என்பவரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்தார்கள். பொலிசாரின் தலையீட்டால் அவர் பந்தோபஸ்தாக ஊர்காவற்றுறைக்கு அனுப்ப்பபட்டிருக்கின்றார்.

வேலியே பயிர் மேய்கிற இந்த விபரீதத்தை அறிந்த நெடுந்தீவு மகாவித்தியாலயப் பழைய மாணவரும், இலங்கையின் தலைசிறந்த கல்விமானும், கொழும்பு றோயல் கல்லூரி அதிபருமான கணபதிப்பிள்ளை அவர்கள் இவ்வாறான அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு வேண்டும் என்கின்ற எதிர்ப்புக்குரலை மனிதாபிமானமாக எழுப்பியிருந்தார்.

இதற்குப் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜெனிவா மகாநாடு நடந்து முடிந்த கையோடு எதிர்ப்புகுரல் வெளியான தினகரன் பத்திரிகையாளர் செந்தில்வேலவரைத் தூக்குவேன் என்று பகிரங்கமாகச் சவால்விட்டிருக்கின்றார்.

பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைக்குப் பக்கபலமாக இருக்க வேண்டிய அமைச்சர் கொலை வெறியனைக் கண்டித்த பத்திரிகையாளனைத் தூக்கப் படாதபாடுபட்டு பாராளுமன்றம் வரை சென்றிருக்கின்றார்.

நெடுந்தீவிலேயே விகிதாசாரப்படி அதிக வாக்கெடுத்ததாக மார்தட்டிக் கொண்ட அமைச்சர் அவர்கள் தனக்கு வாக்கிட்ட மக்களையே தொலைபேசியில் அழைத்து மிரட்டியிருக்கின்றார் என நெடுந்தீவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள் அத்தனை பேரும் அச்சுறுத்தப்பட்டார்களென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா அவர்களே!!! வந்தோரை வரவேற்கின்ற பெருந்குணம் கொண்டவர்கள் நெடுந்தீவு மக்கள் என்பதனால் தங்களினை நாங்கள் இரு கை நீட்டி வரவேற்றோம். வாக்களித்துச் சிறப்பித்தோம்.

இவற்றிற்குக் கைம்மாறாக எம்மக்களுக்கு தங்களின் விறைத்துத் தடித்த குறிகளினால் ஈழதேசியம் பேச முனைகின்றார்கள் தங்களது கட்டளைத் தளபதிகள். இனியாவது தயவு செய்து அவர்களைக் கண்டித்து வையுங்கள்.நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல.

நாங்கள் அரசியல் வாதிகளுமல்ல.அதிபர் கணபதிபிள்ளை அவர்கள் குறிப்பிட்டதுபோல சிறுமியின் சாவிற்குக் காரணமானவர்கள் தண்டனைக் குள்ளாக்கப்பட வேண்டும்.

நீதியானதும்,நிம்மதியானதுமான வாழ்வு நெடுந்தீவு மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சுற்றுலாத்துறை என்கின்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற, ஏற்படுத்தப்படப் போகின்ற,கலாச்சாரச் சீரழிவுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கிடையே கொலையுண்ட சிறுமியின் தொட்டப்பா நானே என்று உரிமை கொண்டாடியிருக்கின்றார் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன். அவரின் வாக்குமூலம் மேலும் எங்களைப் பீதியடைய வைக்கின்றது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உறவிற்கே இக்கதியென்றால் சாதாரண மக்களுக்கு எங்கிருக்கிறது பாதுகாப்பும் அச்சமின்மையும்...?????

தாங்கள் எது செய்தபோதினிலும் தட்டிக் கேட்க ஆளற்று நாதியற்றுக் கிடக்கவில்லை நெடுந்தீவு என்பதைச் சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்.

கடல் கடந்து வாழ்ந்தாலும் உறவுகளுக்காக நாங்கள் உயிரையும் கொடுக்க தயாராயிருப்பவர்கள்.

மனித நேயக்குரல் எழுப்புவோரை அச்சுறுத்துவதைக் கைவிட்டு இக்கொலையில் சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை வழங்குங்கள்.

அரசுதரப்பு பத்திரிகையாயினும் மனித நேயத்தோடு துணிந்து எம்மூர்ச் செய்தியை வெளியிட்ட தினகரன் பத்திரிகையாளர் செந்திவேலவருக்கு எம் நன்றிகள்.

மேலும் இவ்வாறான அராஜகங்கள் எம் தீவகத்தில் தொடருமானால் புலம்பெயர் நிலங்களில் உள்ள தீவக மன்றங்கள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவோம் என இச்செய்தி மூலம் எச்சரிக்கின்றோம்.

kumuthini15may@hotmail.com
நெடுந்தீவிற்க்கான சர்வதேச இணையம்.
குமுதினி இணையவலைக் காப்பகம்..

0 Responses to லக்சினியினை வல்லுறவுக்குட்படுத்திக் கொடூரமாய் கொன்ற கொலைபாதகனுக்குத் தண்டனை வழங்கு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com