Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரதமர் மன்னிப்புக் கேட்டு கடிதம் அனுப்பினார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் "சட்டமின்மையும் சிறுபான்மையினரும்" என்ற தலைப்பில் பேசும் பொழுதுமேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவின் சார்பாக அளிக்கப்பட்ட ஆதரவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமை குறித்த அக்கறையும் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார் மனித உரிமைப் செயற்பாட்டாளரான கவிதா சிறிவஸ்றவா.

0 Responses to மகிந்தவிடம் எமது பிரதமர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com