2012 13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 26.03.2012 சட்டசபையில் தாக்கல் செய்தார். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி மதியம் 12.56 மணிக்கு முடித்தார்.
அதாவது 2 மணி 56 நிமிட நேரம் அவர் நின்று கொண்டே பட்ஜெட் உரையை படித்தார். பட்ஜெட் உரை முடிந்ததும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் பதில் அளிக்கையில்,
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் அம்மா அம்மா என்ற அர்ச்சனையே மேலோங்கி இருந்தது. உரையைத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை நின்று கொண்டே இருந்த நிதி அமைச்சர் பன்னீர் செல்வம்தான் பாவம் என பதிலளித்தார்.
மேலும் பட்ஜெட் விவாததத்தில் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரியவரும். மக்கள் தவறை உணரும் வரை இத்தகைய வரிவிதிப்பு இருக்கும் எனவும் கூறினார்.
முன்னதாக சட்டசபையில் பேச, சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்ததையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்
பதிந்தவர்:
Anonymous
26 March 2012
0 Responses to அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்