தீக்குளித்து கீழே விழுந்துகிடந்தவரை சக திபெத்திய ஆதரவாளர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்
சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ இந்தியா வருவதை எதிர்த்து இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த எதிர்ப்பு பேரணியொன்றில் திபெத்திய செயற்பாட்டாளர் ஒருவர் தீக்குளித்துள்ளார். அருகில் நின்றவர்கள் தீயை அணைத்து, காயப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
திபெத்தில் நடக்கும் சீன ஆட்சியைக் கண்டித்து சீனாவில் அண்மைய மாதங்களில் 25க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள்(பெரும்பாலானவர்கள் திபெத்திய துறவிகள்) இவ்வாறு தீக்குளித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
திபெத்திய பிராந்தியம் சீனப் பெருநிலப் பரப்பின் பிரிக்கமுடியாத அங்கம் என்று சீன ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
சீனாவில் திபெத்தியர்கள் செறிந்துவாழும் சிச்சுவான் மாகாணத்திலேயே பெரும்பாலான தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்துவருகின்றன.
இந்தியாவில் திபெத்திய செயற்பாட்டாளர்கள் தீக்குளிக்கும் இரண்டாவது சம்பவம் இது: கடந்த ஆண்டில் சீனத் தூதரகத்துக்கு முன்பாக தீக்குளித்துக்கொண்ட ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
வடக்கு இந்திய நகரான தர்மஷாலாவில் ‘நாடு கடந்த திபெத்திய அரசொன்று’ இயங்கிவருகிறது. சீனாவின் அதிபர் ஹூ ஜிந்தாவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்த வார இறுதியில் இந்தியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Responses to இந்தியாவில் திபெத்திய செயற்பாட்டாளர் தீக்குளிப்பு