Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள, எப்பிங் சனசமூக மண்டபத்தில் சிட்னி வாழ் இலங்கை பிரஜைகளுக்காக ஓர் கருத்துப் பரிமாறல் நிகழ்வு இலங்கை அரச ஆதரவாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மே 2009 இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல போர்குற்ற நடவடிக்கைகளை தனது கடற்படையின் துணையுடன் நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்படும் அவுஸ்திரேலிய நாட்டுக்கான தற்போதைய இலங்கைத் துாதுவரான முன்னாள் இலங்கை கடற்படைத் தளபதி திஸ்ஸர சமரசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிகழ்விற்கு சில அரச ஆதரவு தமிழர்கள் உட்பட 20 க்கும் குறைவானோர் பங்குகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வு நடைபெறுவது பற்றி அறிந்த சிட்னி வாழ் தமிழ் உணர்வாளர்கள், குறுகிய கால அவகாசத்தில், ஓர் எதிர்ப்புப் போராட்டத்தை அங்கு ஒழுங்கு செய்திருந்தனர்.

இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றப் படங்களையும், பதாதைகளையும் தாங்கிய வண்ணம் நடந்த இப் போரட்டத்தில் போர் குற்றவாளி திஸ்ஸர சமரசிங்கவுக்கு எதிரான பல கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தினால் இலங்கை அரசின் கூட்டத்தில் பங்கெடுக்க என வந்த சில பெரும்பான்மை இனத்தவரும், மண்டபத்திற்குள் செல்லாமல் திரும்பிச் சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

0 Responses to சிட்னியில் இலங்கை அரச ஆதரவாளர்களின் கலந்துரையாடலிற்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com