நேற்றிரவு ரஸ்ய தலைநகர் மொஸ்க்கோவில் உள்ள பண்ணை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் கருகி சாம்பலானார்கள். இவர்கள் அனைவரும் ஏழை நாடான ரடிகிஸ்தானில் இருந்து பணி நிமிர்த்தம் ரஸ்யா வந்தவர்களாகும். இறந்தவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை விசாரணைகள் தொடர்கின்றன என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.
இது இவ்விதமிருக்க ரஸ்ய மாபியா கும்பலின் துப்பாக்கி சூடுகள் இலண்டனில் வெடிக்க ஆரம்பித்துள்ளன. புலம் பெயர் தமிழருக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் நாட்டுக்கு நாடு, நகரத்திற்கு நகரம் பிஸ்தாக்கள் இருப்பதைப் போல புலம் பெயர்ந்த ரஸ்யர்களுக்கும் இருக்கிறார்கள். ரஸ்யாவில் உள்ள லெனின்கிராட் நகரம் போல லண்டனை இவர்கள் லண்டன்கிராட் என்று தங்களுக்குள் அழைக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கு முன் சோவியத் உடைவோடு புலம் பெயர்ந்த இவர்களிடையே தற்போது ரஸ்யாவின் மாபியாக்கள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2008 ம் ஆண்டு இலண்டன் வந்து தன்னை நன்கு விஸ்த்தரித்துக் கொண்ட வைத்தியர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டது. கல்வி, திறமை எதற்கும் முக்கியம் இல்லாமல் ஆயுதத்திற்கு முக்கியம் கொடுக்கும் மாபியா குழுவிடம் புலம் பெயர் ரஸ்யர்கள் மாட்டுப்பட்டுவிட்டார்கள் என்பதை இந்தச் செய்தி கோடி காட்டுகிறது.
இலண்டனில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சாதாரண விடயமல்ல. ஏற்கெனவே பழைய கே.ஜி.பி உளவாளி ஒருவருக்கு இலண்டனில் வைத்து, ரஸ்ய உளவுப்பிரிவு பொலோனியம் விஷம் வைத்து கொன்றது தெரிந்ததே. இப்போது இலண்டனில் ரஸ்ய மாபியா என்ற போர்வையில் வெடித்துள்ள துப்பாக்கி வேட்டு வேறு பல கதைகளையும் சொல்கிறது. புதிதாக அதிபர் பதவிக்கு வந்துள்ள புற்றினுக்கு எதிராக மேலை நாடுகளில் பிரச்சாரம் செய்தால் கே.ஜி.பி மாபியா வடிவில் வரலாம் என்ற எச்சரிக்கையையும் தருகிறது. ஆக, புற்றினின் துப்பாக்கிக் கரங்கள் இனி வெளிநாடுகளிலும் நீளலாம் என்பதற்கு இது ஒரு முன்னெதிர்வாக இருக்கலாம், பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மறுபுறம் அமெரிக்காவில் உள்ள வதிவிட அனுமதியற்ற, கிரிமினல் பின்னணி கொண்டவர்களை மடக்கிப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் 3168 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் எந்த நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்தார்களோ அந்த நாட்டுக்கே திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக அமெரிக்க வதிவிட அனுமதியற்றவர்கள் சுமார் 10.000 பேர்வரை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் பாhPஸ் நகரத்தின் தெற்குப் புறத்தே வெளிநாட்டு பின்னணி கொண்ட முகமட் மராச் ஏழு பேரைக் கொன்ற பின்னர், பிரான்சில் நடைபெறும் தேடுதல் வேட்டை மற்றைய நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இத்தகைய தேடுதல் வேட்டை உண்மையாக உழைக்க வந்தவர்களையும் காவு கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் எதிர் காலத்தில் வரக்கூடிய அபாயங்களை தவிர்க்க இத்தகைய முயற்சி அவசியம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கப்பாணியில் மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் தேடுதல் வேட்டைகள் இடம் பெற வாய்ப்புள்ளது. சென்ற வாரமே டென்மார்க்கில் வதிவிட அனுமதி பெறாமல் போலியான ஆவணங்களுடன் இருப்போர் தொகையை டேனிஸ் போலீசார் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரான்சைப் போல அமெரிக்க ஒகியோவில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று முன்தினம் ஏழு பேரை கொன்றது தெரிந்ததே. இவர் எல்லோரும் வரிசையாக வாருங்கள் உங்களை நான் கொல்லப்போகிறேன் என்று கூறிவிட்டே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இந்த நபர் கொரிய பின்னணியுடையவராகும். சுமார் 43 வயது மதிக்கத்தக்க இந்த சந்தேக நபர் பல்கலைக்கழகத்திற்கு சுமார் ஐந்து கி.மீ தொலைவில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இவர் இதே பல்கலைக்கழகத்தில் முன்னர் மாணவராக இருந்துள்ளார், விசாரணைகள் தொடர்கின்றன.
அதேவேளை ஈராக்கில் வன் முறைப்போரின் மரணங்கள் கடந்த மார்ச் மாதம் கணிசமான அளவு குறைந்தது போல ஆப்கானிலும் குறைந்துள்ளதாக நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் தெரிவித்தார். கடந்த தை – மாசி மாதங்களில் 22 வீத வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வன்முறை சம்பவங்கள் கடந்த ஒன்பது மாதங்களில் கணிசமான வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
0 Responses to மொஸ்கோவில் தீ விபத்து 12 வெளிநாட்டவர் மரணம்