Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மரணத்தை விற்பனை செய்யும் பேய் என்று அழைக்கப்படும் ரஸ்யா நாட்டை சேர்ந்த ஆயுத விற்பனையாளர் விக்டர் பவுற் என்பவருக்கு அமெரிக்க நீதிமன்று 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொலம்பியாவில் உள்ள பார்க் தீவிரவாத அமைப்பிற்கு தரையில் இருந்து ஏவும் ஏவுகணைகளை விற்பனை செய்தார் என்று குற்றம் சுமத்தி இவர் கைது செய்யப்பட்டார். ரஸ்யாவில் இருந்து பாங்கொக் செல்லும் வழியில் விமான நிலையத்தில் வைத்து கடந்த 2008 ம் ஆண்டு அமெரிக்க போதைவஸ்த்து, ஆயுதக்கடத்தல் தடைப்பிரிவான டி.ஈ.ஏ போலீசார் இவரை மடக்கினார்கள். அமெரிக்காவின் இந்த செயல் தனிப்பட்ட முறையில் அமெரிக்க – ரஸ்ய உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பைக் கேட்டதும் வெகுண்டெழுந்த ரஸ்ய வெளிநாட்டு அமைச்சு தனது கண்டனங்களை வெளியிட்டுள்ளது. தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் தமது நாட்டு பிரஜைக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தனது கடும் அதிருப்தியை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

மறுபுறம் ஜப்பானில் சுனாமி தாக்கி வெடித்த புக்குசீமா அணுசக்தி நிலைய றீ அக்டர் போல பிரான்சின் அணுசக்தி மைய றீ அக்டர் ஒன்றில் தீப்பிடித்துள்ளது. ஈடிஎப் சக்தி நிலையம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ஓயில் கசிவால் இந்த தீப்பிடிப்பு விபத்து ஏற்பட்டதாகவும், றீ அக்டரின் பாதுகாப்பு கதவுகள் தானியங்கியால் நின்றுவிட்டதாகவும் தெரிவித்தார்கள். தீ விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் நிலமை பூரண கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக தீயணைப்பு பிரிவினர் கூறுகிறார்கள். ஆனால் இது சாதாரண விடயமல்ல பாரதூரமான சிக்கலை தரவல்லது. பிரான்சிற்கும் ஜப்பானைப் போல முன்னர் செய்த பழிபாவம் பிடித்துவிட்டதா என்று அஞ்சுமளவுக்கு இந்த நிகழ்வின் தாக்கம் இதுவரை மோசமாக செல்லவில்லை.

இதுபோல தற்போது வடகடலில் ஸ்கொட்லாந்து அயர்டீஸ் நகரத்திற்கு கிழக்கே 250 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் இருந்து எரிவாயு எடுக்கும் மேடையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு கசிவு ஆபத்தால் இந்த மேடை முழுவதுமே வெடித்து சின்னாபின்னமாக சிதறக்கூடிய அபாயம் இருக்கிறது. எட்டுப்போர் கொண்ட நிபுணர் குழு உலங்குவானூர்தியில் சென்று இப்பகுதியை வானில் இருந்து நோட்டமிட்டு வருகிறார்கள். மேலும் நிபுணர்கள் அனுப்பப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற மாதம் 25ம் திகதி ஏற்பட்ட விபத்து காரணமாக இதில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல இன்னொரு விபத்து நேற்று ஆப்கானில் நடந்துள்ளது, இதில் ஏழு பேர் பரிதாப மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்க படை வீரர் ஒருவர் 17 அப்பாவிகளை கொன்று தள்ளிய நிகழ்வு இடம் பெற்ற அதே நகரத்தில் நடந்துள்ளது. நேட்டோ படைத்தளத்திற்கு எரிபொருள் ஏற்றிவந்த பார வண்டியில் தலபான்கள் கைக்குண்டு வீசிய காரணத்தால் வண்டி புரண்டு, வெடித்து சிதறியது இதனால் அருகில் வந்த மினி பஸ்சில் இருந்த ஏழு பேர் கருகி மாண்டதாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியின்படி பாரவண்டி ஒரு காருடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இந்த மரணங்கள் நடந்தாகக் கூறுகிறது.

அலைகள்

0 Responses to ஆயுத விற்பனை செய்த ரஸ்யருக்கு 25 வருடங்கள் சிறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com