அரசாங்கத்தின் பிழையான வெளிநாட்டுக் கொள்கையினாலேயே இந்தியா எம்மைக் கைவிட்டது. எனவே வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பதவி விலக வேண்டுமென்று ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
புலம்பெயர் தமிழர்கள் வேறு புலம்பெயர் புலி ஆதரவுத் தமிழர்கள் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறிந்து கொள்ளாது குழம்பிப் போயுள்ளது.
தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைக்கு ஆதரவானவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அரசாங்கம் இன்று புதுக் கதையொன்றை கூறுகிறது. அரசாங்கம் இப்பிரச்சினையை சிக்கலாக்கிக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் புலம்பெயர் தமிழர்கள் குழு வேறு அதேவேளை புலம்பெயர் புலி ஆதரவாளர் குழு வேறு என்பதை அரசாங்கம் பிரித்தறித்து புரிந்து கொள்ளல் வேண்டும்.
அதைவிடுத்து அனைத்தையும் ஒரே குட்டையில் போட்டு குழப்பிக் கொள்ளல் ஆகாது. தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்ல. அதனை எதிர்ப்பவர்களும் உள்ளனர்.
அரசாங்கத்தின் பிழையான வெளிநாட்டுக் கொள்கையினாலேயே இந்தியா எம்மைக் கைவிட்டது. எனவே வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பதவி விலக வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 Responses to தவறான வெளிநாட்டு கொள்கையினாலேயே இந்தியா எம்மைக் கைவிட்டது!