Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சகோதரிகள் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அரைமணி நேர இடைவெளியில் அவ்விருவரதும் உயிர்களைப் பறித்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணத்தில் புதுவருட தினமான வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கும் இலுப்பையடிச் சந்திக்குமிடையில் பலாலி வீதியில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச்சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆங்கில ஆசிரியையான செல்வி சங்கரப்பிள்ளை சுவர்ணலதாவும் (43 வயது) அவரது சகோதரியும் கொட்டடி நமசிவாயம் வித்தியாலய ஆங்கில ஆசிரியையான செல்வி ச.கீதாஞ்சலியுமே (40 வயது) உயிரிழந்தவர்களாவர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது இவ்விருவரும் தாய் தந்தை மற்றும் இரு சகோதரிகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்தனர். புதுவருடம் பிறப்பதற்கு முன் இவ்விரு சகோதரிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுவணர்லதா தொலைக்காட்சி இருக்கும் அறைக்குள் சென்று கதவை மூடிவிட்டார். இவ்வாறான வாய்த்தர்க்கம் இடையிடையே ஏற்படுவதால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை. எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அந்த அறைக்கதவை தட்டிய போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது, பல தடவைகள் அழைத்தும் பதில் வராததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பஞ்சாபியின் மேல் சால்வையால் மின்விசிறியில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

வீட்டிலிருந்தோர் கத்திக்குளறியவாறு சால்வையை வெட்டி உடலை கீழே இறக்கிய போது அவர் இறந்துவிட்டதை அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சகோதரி உணர்ந்து கொண்டார்.
பதைபதைத்த பெற்றோர் கீழே கிடந்த மகளின் உடலை வாகன மொன்றில் ஏற்றி யாழ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்து விட்டாரென டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்பத்திரியில் இருந்துவீடு திரும்பிய அவர்கள் மற்ற மகளைக் காணாது எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். கிடைக்காது போகவே இரவு 8.30 மணியளவில் வீட்டின்பின்புறத்திலுள்ள கிணற்றை சென்று பார்த்த போது கீதாஞ்சலியின் உடல் மிதப்பது தெரிந்தது.அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய்விட்டனர்.

சகோதரி தூக்கில் தொங்கி உயிரிழந்ததை கண்டே அவரது உடல் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன் மற்ற சகோதரி கிணற்றினுள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். நேற்றுக்காலை இவர்களது வீட்டிற்கு வந்த பொலிஸார் கிணற்றினுள்ளிருந்து சடலத்தை வெளியே எடுத்து யாழ் ஆஸ்பத்திரி சவச்சாலைக்கு கொண்டு சென்று சகோதரியின் உடலுடன் இவரது உடலையும் வைத்தனர்.

இருவரதும் மரண விசாரணைகளின் பின் சடலங்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆங்கில ஆசிரியைகளான இவ்விரு சகோதரிகளினதும் அவலச் சாவு யாழ். மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Responses to யாழ்ப்பாணத்தில் அக்கா தங்கை உயிரை பறித்தது வாய்ச்சண்டை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com