Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து இரகசியமான முறையில் அரசியலில் ஈடுபட எமது நாட்டில் அனுமதி இல்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து இரகசியமாக இலங்கைக்குள் பிரவேசித்து, இரகசியமான முறையில் அரசியலில் ஈடுபடுவதற்கு எமது நாட்டில் ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வந்து ஜே.வி.பி கிளர்ச்சிக்குழுவுடன் இணைந்து அரசியல் நடத்திய குமார் குணரட்ணம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்ணம் இலங்கையில் இருந்து கொண்டு அரசியல் செய்ய அரசு அனுமதி வழங்கியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என தெரியாது. எதிர்வரும் காலங்களில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்கள் பற்றிய முழுமையான விசாரணை நடத்தப்படும்.

மேலும் குமார் குணரட்ணத்தின் செயற்பாடுகள் தொடர்பில் காவற்றுறையினர் விசாரணை நடத்துவார்கள். அவுஸ்திரேலிய பிரஜை என்ற காரணத்தினால் இவரைக் கைது செய்யாது நாடு கடத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர் காணாமல் போனமை தொடர்பில் அரசிற்கு எதுவும் தெரியாது என அறிக்கைகள் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை நாம் கைது செய்யவில்லை நாடு கடத்தினோம் ஏனெனில் இவர் இரகசியமான முறையில் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார் என தற்போது பாதுகாப்புத் தரப்பில் இருந்து கருத்துக் வெளிவருகின்றன. குமார் குணரட்ணம் தொடர்பில் இவர்கள் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அவுஸ்திரேலிய பிரஜை என்பதனால் நாடு கடத்தினோம்- அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com