Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 ஆம் ஆண்டு காலப்பகுதி ஈழ வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த நாளாகவும், அழியாத வரலாற்றுப் பதிவாகவும் மாறிவிட்ட ஆனந்தபுரம் சமர்க்களத்தில் வீரகாவியமாகிய நூற்றுக்கணக்கான மாவீரர்களையும் நினைந்து நெஞ்சுருகும் அதே வேளை,

இம்மாத காலங்களில் வீரகாவியமாகிய மாவீரர்களையும், மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் நினைவுகொள்ளூம் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 22.04.2012 அன்று பி.ப 5:30 தொடக்கம் இரவு 9:00 மணிவரை Ealing Road, Wembley, Middlesex, HA0 4PW எனும் முகவரியில் அமைந்துள்ள "Alperton Community School" மண்டபத்தில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

எம் தேச விடுதலையின் விடிவெள்ளிகளான பிரிகேடியர் சொர்ண்ணம், பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் தமிழேந்தி அப்பா, பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், கேணல் ரமணன், கேணல் இளங்கீரன் உட்பட ஆயிரம் ஆயிரம் வீரர்கள் எம் தேசவிடுதலைக்காக தம் உடலை வித்தாக்கி "சமர்க்களங்களின் நாயகர்களாக" சாதனை வீரர்களாக எம் அடுத்த தலைமுறையின் வழிகாட்டிகளாக ஈழ விடுதலைக்கு பலம் சேர்த்து வீரகாவியமாகியுள்ளார்கள்.

அத்தோடு விடுதலைப் போரின் இன்னுமோர் பக்கமாய் மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகவே பணிசெய்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர்களையும் நினிவுகொள்ளும் நிகழ்வாகவும் இந் நிகழ்வு அமைகின்றது.

இந் நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொள்ளுமாறு பிரித்தானியா தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அழைப்பு விடுத்துள்ளது.

0 Responses to சரித்திர நாயகர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் நினைவு வணக்க நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com