பர்மாவுக்கு ஆயுதங்களை விற்பதற்கான தடை தவிர்ந்த, அந்த நாட்டுக்கான ஏனைய தடைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதை தான் ஆதரிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.
பர்மாவில் ஒரு வருடத்துக்கு முன்னதாக ஒப்பீட்டளவிலான சிவிலியன் அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அங்கு செல்லும் முதலாவது மேற்கத்தைய தலைவரான கேமரன் அவர்கள், அங்கு ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சி அவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
இத்தகைய தடைக்கான இடைநிறுத்தம் மறுசீரமைப்பு இயக்கத்தில் நிலையை பலப்படுத்தும் என்று ஆங் சான் சூ சி அவர்கள் கூறியுள்ளார். முன்னதாக பர்மிய அதிபரான தெய்ன் செய்ன் அவர்களைச் சந்திந்த கேமரன் அவர்கள், பர்மா அரசியல் கைதிகளை விடுதலை செய்து, பாரிய ஜனநாயகத்தை நோக்கிய நகர்வுகளை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
0 Responses to பர்மிய தடை நீக்கத்துக்கு கேமரன் ஆதரவு