ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் இலங்கை அமைச்சர் டியு.குணசேகர உரையாற்றினார்.
அப்போது அவர், ‘’இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாகவே ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
1983 கறுப்பு ஜுலை குறித்தோ, 1988 ல் இடம்பெற்ற அரசு பயங்கரவாதம் குறித்தோ சர்வதேச அளவில் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
போரில் மக்கள் இறப்பது இயல்பு தான் என்று ஆப்கானிஸ்தான் போரின்போது அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். ஆனால் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை மீது கேள்வி எழுப்பப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவின் இரட்டை வேடம் தெரிகிறது.
போரின் இறுதி நாட்களில், சண்டையை நிறுத்தவும், ஐ.நா. படையை அனுமதிக்கவும் நெருக்கடிகள் வந்தன. இதனை ஏற்க மறுத்த காரணத்தினால் தான், விரோத நோக்கத்துடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்தியாவை மேற்கு நாடுகளுடன் சேர்ந்து விட்டதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இங்கு பிரச்னை ஏற்படும் போது தமிழ்நாட்டில் அதன் பிரதிபலிப்பு தெரியும்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது.
அது தொடர்பாக இந்தியாவுடன் எந்த விரோதமும் இல்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தாலும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்க முடிந்திருக்காது. இரு நாடுகளுக்குடையில் தொடர்ந்து நெருங்கிய உறவு உள்ளது.
இந்தியா தந்திரமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தியாவுக்கு உள்நாட்டு பிரச்னை இருக்கும்.
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுதல், தமிழ்நாட்டின் நெருக்குதல் காரணமாக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது’’என்று தெரிவித்தார்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது
பதிந்தவர்:
ஈழப்பிரியா
04 April 2012
0 Responses to இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது