Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டார் நாட்டில் உள்ள கடைத்தொகுதி ஒன்றின் முதலாவது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்குப்பட்டு 19 பேர் பரிதாப மரணமடைந்தார்கள்.

இறந்தவர்களில் 13 பேர் சிறுவர்கள் இவர்கள் அனைவரும் நியூசிலாந்து, ஸ்பானியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களாகும்.

இறந்த பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாகும், இவர்கள் ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் இரட்டைப் பிள்ளைகள் போல மூன்று பிள்ளைகளாக பிறந்தவர்களாகும்.

லில்லி – ஜாக்சன் – வில்சர் வீக்ஸ் என்ற இந்த மூன்று வயதுடைய மூன்று குழந்தைகளும் ஒன்றாக இறந்தது பேரிழப்பு என்று நியூசிலாந்து பிரதமர் யோன் கே தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடைத்தொகுதியில் சுமார் 20 பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, காரணங்கள் தெரியவரவில்லை.

இறந்தவர்களில் நான்கு ஸ்பானிய பிள்ளைகளும் அடக்கம்.

இது இவ்விதமிருக்க இன்று அதிகாலை இத்தாலியின் வடபுலத்தில் மறுபடியும் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டது ஒருவர் மரணமடைந்தார்.

நில நடுக்க அளவு 5.8 ரிக்டர் அளவில் இருந்ததாகவும் சகல இடங்களிலும் நடுக்கம் தெளிவாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஏழு பேர் மரணமடைந்தது தெரிந்ததே.

0 Responses to கட்டாரில் தீ விபத்து கூடிப்பிறந்த மூன்று பிள்ளைகளுடன் 19 பேர் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com