Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ளது கஞ்சனூர். இங்கு உள்ள சுக்கிரன் கோவில் மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமானது. இது நவகிரக தலங்களில் ஒன்று.

இந்த கோவிலுக்கு நித்தியின் சீடர்கள் இரண்டு பேர் 29.05.2012 அன்று காலை 7 மணிக்கு வந்துள்ளனர். அங்கு கோவில் நிர்வாகத்திடம் சென்று, இந்த ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை கேட்டுள்ளனர்.

அப்போது கோவில் நிர்வாகத்திற்கும், ஆதினத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கோவில் நிர்வாகத்தினர் சொல்ல, சலசலப்பு ஏற்பட்டது. இதையறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி நித்தியின் சீடர்களை வெளியேறச் சொல்லியுள்ளனர். அவர்கள் மறுத்ததால், அடித்து விரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மதுரை ஆதினத்தின் மூலம் திருவிடைமருதூர் டிஎஸ்பி இளங்கோவனிடம் புகார் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் மதுரை ஆதினமும், இளைய ஆதினம் நித்தியும் மற்றும் சீடர்களும் கஞ்சனூர் விரைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


நித்தி வந்தாலும் உதைத்துதான் அனுப்புவோம் என்று ஊர் பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

0 Responses to நித்தி வந்தாலும் உதைத்துதான் அனுப்புவோம்! சீடர்களுக்கு அடி உதை கொடுத்த மக்கள் ஆவேசம்! நித்தி ஷாக்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com