Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னாரில் அமைச்சர் றிஸாட் பதியூதீனுக்கு எதிராக இடம் பெற்ற கண்டன நிகழ்வில் கலந்து கொண்டு, மன்னார் ஆயருக்கு ஆதரவாக உரையாற்றிய மன்னார் மாவட் சிரேஸ்ட ஊடகவியலாளர் மீது, அமைச்சரின் சசோதரர் என கூறிக்கொண்டவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

அமைச்சர் றிஸாட் பதியூதீனின் சசோதரர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முஜகீர் என்பவர், இன்று மாலை 5.10 மணியளவில் மன்னார் நகர் பகுதியில் வைத்தே மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மூர்வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து மன்னார் பஸார் பகுதியை நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மன்னார் வலயக்கல்வி அலுவலக பிரதான வீதியில் வைத்து அவரை பின் தொடர்ந்து வந்த 59-5894 இலக்கம் கொண்ட சிகப்பு நிற ஜீப் வண்டியால் மோத எத்தனித்துள்ளனர்.

அது தவறியதன் காரணத்தினால் அவரை இடை மறித்து தீய வார்த்தையினால் திட்டிய பின் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் மீதான தாக்குதலை வன்னி மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் வண்மையாக கண்டித்துள்ளது.

0 Responses to மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மீது அமைச்சர் றிஸாட்டின் சகோதரர் தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com