தமிழீழம் பற்றி பேசிவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டில்லியில் உண்ணாவிர தமிருக்கட்டும் பார்க்கலாம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசுவார். 18 எம்.பி.க்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் டில்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் அவலத்தை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் வைகோ, சீமான், பழ. நெடுமாறன் ஆகியோரை விஞ்சும் வகையில் ஈழம் கிடைத்த பின்பே உயிர்துறக்கப் போவதாகக் கூறியுள்ள கருணாநிதியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் ராமதாஸ்.
0 Responses to ஈழக் கோரிக்கையுடன் கருணாநிதி டில்லியில் உண்ணாவிரதம் இருப்பாரா?