Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற நாட்டின் தலைவராக இருப்பதற்கான தகுதியை சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் இழந்துள்ளதாகவும் அவருடைய தலைமைத்துவ அடையாள அட்டை காலாவதியாகிவிட்டது என்றும் ஐ.நா செயலர் கூறினார்.

நேற்று முன்தினம் சிரியாவின் கவுலா நகரத்தில் சிரிய படைகள் நடாத்திய காட்டு மிராண்டித்தனமான ஆட்டிலறித் தாக்குதல்கள் காரணமாக 92 பேர் மரணமடைந்தமை ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

இறந்தவர்களில் 60 பேர் பெரியவர்கள் என்றும் 32 பேர் சிறு பிள்ளைகள் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது, ஆனால் மனித உரிமைகள் கழகமோ 114 பேர் என்று கூறியுள்ளது.

இந்தப் படுகொலைகள் அனைத்திற்கும் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டே பொறுப்பு என்றும் இது மானிடப் படுகொலை என்றும் ஐ.நா கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரிய அதிபர் ஆஸாட் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டிய பருவம் வந்துவிட்டது, இனியும் ரஸ்யா குழப்பம் விளைவிக்காமல் அவருடைய பதவி நீக்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சற்று முன்னர் அமெரிக்கா கேட்டுள்ளது.

அதேவேளை சிரிய போராளிகள் அமைப்பான நான்கு பிரிவினர் யுத்த நிறுத்தம் இத்தோடு முறிவடைந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.

கொபி அனானின் செல்லாக்காசு உடன்படிக்கையை நரகக்குழிக்குள் வீசிவிட்டு ஐ.நா பாதுகாப்பு சபை உடனடியாக உருப்படியாக எதையாவது செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்.

முன்னர் சிங்கள இராணுவமும் பின் இந்திய இராணுவமும் 90 பேரை கொன்று நடாத்திய வல்வைப் படுகொலைபோல இந்த கவுலா படுகொலைகள் அப்பகுதியில் பெரும் உணர்ச்சியைக் கிளப்பிவிட்டுள்ளன.

இனிமேலும் காலதாமதம் செய்ய முடியாத நிலையில் அரபுலீக்கின் வெளிநாட்டு அமைச்சர்கள் இன்று அவசரக் கூட்டத்தை நடாத்துகிறார்கள்.

நடைபெறும் படுகொலைகளை உடன் நிறுத்த ஆவன செய்ய வேண்டுமென அரபுலீக் அறிக்கை தெரிவிக்கிறது.

சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க முடியாதென்று மேலை நாடுகள் தெரிவித்துள்ளன.

சிரியாவில் புரட்சி ஏற்படுத்த முடியாது ஆஸாட் றெஜீம் நடாத்தும் குடும்ப ஆட்சியை மாற்றினாலே போதுமென மேலை நாடுகள் கருதுகின்றன.

இதே குடும்ப ஆட்சியே சிறீலங்காவில் நடப்பதாக நேற்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது தெரிந்ததே.

மேலும் இந்தியா – சிறீலங்கா கடந்த காலங்களில் ஈழத்தில் நடாத்திய மனித உரிமை மீறல்கள் இப்போது அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

போர்க் குற்ற விசாரணை நூறு ஆண்டுகள் தாண்டினாலும் உறங்கிவிடாது விசாரணைகள் நடக்கும் என்பது தெரிந்ததே.

அலைகள்

0 Responses to ஆட்சியில் இருப்பதற்கான தகுதியை சிரிய அதிபர் இழந்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com