Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண் சீடர் ஆர்த்தி ராவ் புகார் மற்றும் செய்தியாளர், கன்னட அமைப்பினரை தாக்கியது ஆகியவற்றில் நித்தியானந்தா கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் 13.06.2012 அன்று ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன் நித்தியானந்தா சரணடைந்தார்.

அப்போது தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். சரணடைந்த அவரை ஒரு நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கர்நாடகா போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணைக்காக இன்று (14.06.2012) ராமநகரம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோமளா அவருக்கு நிபந்தனையின் பேரின் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் பிடதி ஆசிரமத்துக்கு செல்லவும் தடை விதித்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்தநித்யானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான நித்தியானந்தா கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராமரெட்டி முன்பு இன்று மாலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நித்தியானந்தாவை 10 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆட்சியர் ஸ்ரீராமரெட்டி உத்தரவிட்டார். மேலும் நித்தியானந்தாவை மைசூர் சிறையில் அடைக்குமாறும் உத்தரவிட்டார்.

1 Response to நித்தியை 10 நாள் மைசூர் சிறையில் அடைக்க ராமநகரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

  1. நித்தியின் நிலமையைப் பார்க்கையிலே இன்பத்தேன் வந்து பாயுது நெஞ்சினிலே.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com