அரசாங்த்தின் மீது குற்றம் சுமத்துவதைக் காட்டிலும் முதலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சரத் பொன்சேகாவின் மருமருன் ஆயுத ஊழல் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிடியாணைக்கு உட்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க சரத் பொன்சேகா முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எந்த விடயங்களிலும் அரசியல் தலையீடு உள்ளதாக சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்த கெஹலிய ரம்புக்வெல,
சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய நிலையில் அவரை மீண்டும் இராணுவத்தளபதியாக நியமித்தமை அரசியல் தவறுதான் என்று குறிப்பிட்டார்.



0 Responses to பொன்சேகாவை இராணுவத்தளபதியாக நியமித்தமை அரசியல் தவறு!: கெஹலிய