19.ஆடி.1985 குமுதினி -- 10.ஆனி.தூயஒளி சிங்கள இனவெறிக் கடற்படையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்! குருநகர் மக்கள் தம்வாழ்வோடு ஒன்றித்த கடல்தொழில் சார்ந்த
உழைப்பின் வீரமரபோடு தொழில் ஈடுபாடு கொண்டவர்கள்:பல இடங்களில் இத்தகைய வீரமிக்க ஆதிபத்திய கரைவலைத் தொழில் அரிதாகிகவிட்டது!
குருநகர் மீனவர்கள் இன்றுவரை இத்தொழிலை மேற்கொண்டு வருபவர்கள்: 1986.ஆனி.10 குருநகர் துறைமுகம் வெள்ளிகளின் மினு மினுப்பு மறையாத நேரம் கலகலப்காகக் காணப்பட்டது..'தூயஒளி படகு' 31மீனவர்கனை சுமந்த படி அதிகாலைவேளை புறப்பட்டது. படகில் இருந்த மண்டாடிமார் உரத்தகுரலில் இன்றைய நிலவரம் மண்டைதீவு பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கோடி வலைவைப்போம் என்றபோது பெரியஜெற்றி தாண்டவும் யாகப்பர் ஆலயத் திருந்தாதி மணி அடித்தது: அந்தஓசை அவர்களது இதயஒளி சற்றுதூரம் படகு சென்றதும் பாசையூர் அந்தோனியார் கோவில்கோபுரம் படகைத் திருப்பி அணியத்தைப் பார்க்கவிட்டு கைகூப்பி வணங்கினார்கள்.
முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள்:27பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர்!வலை வளைக்க ஆயத்தமாக: தொழிலுக்குச் சென்றவரன்றி சண்டைக்குச் சென்றவரல்ல!கடலோடு காற்றோடு போராடி சீவியம் நடத்தப் போராடச் சென்றவர்கள்.விடியலின் பூபாளம் தென்னை பனையின் ஆர்ப்பரிப்பு ஆனந்தமாக இசைபாடும் நேரம் எங்கிருந்து
இந்த இனவெறியர்! முகமூடியனிந்தபடி! சிங்களக் கடற்படையினரின் சிறியகப்பல்...பலவிதமான ஆயதங்களும் பொருத்தபட்டிருந்தது! மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்
கடலில் நிற்கும்படி உறுமினார்கள்.
பின்பு கோடரி வாள் கத்தி பொல்லால் துவக்கால் கோரணிய வாதைபுரிந்து 31 கடல் மறவர்களையும் வீழ்த்தினார்கள்! மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது மீன்களை ஜஸ் பெட்டிக்குள் அடுக்கினால்போல் கவரிமான்களை குருநகர் சன சமுக நிலையத்து விறாந்தையில் குவித்தனர்!அக்காட்சியை ஒப்பிட வார்த்தையே இல்லை!வீரப்போர் தொடங்கிய அன்றே கடற்கரை வீதிகளெங்கும் சிங்களவெறியரின் செல் விழத்தொடங்கியது அன்று சிந்தத் தொடங்கிய கண்ணீரும்-அழுகுரல் ஓலமும்-இரத்தமும்-மரணங்களும் சிந்திக் கொண்டுதான் மறவர் பூமியில் இருக்கின்றது:
இவர்களுக்காக விழிநீர் சிந்துபவர்கள் குருநகரில் குவிந்து கிடக்கிறார்கள். படுகொலைக்கான நியாயம் வேண்டி நின்றவர்கள்: இன்றுவரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை இன்றும் குருநகர் எங்கும் அழுகுரல் கேட்கிறது.
இனம் அழித்து-பிணம் தின்னிக் கழுகுகளிடம் என்று தமிழன் தம்பித்து தாயோடு சேயாக தமிழால் இணைந்து வாழ்வான்?
மண்டைதீவுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 | குருநகர் மீனவர்கள் வலி சுமந்து 26வருடங்கள்
பதிந்தவர்:
தம்பியன்
04 June 2012
0 Responses to மண்டைதீவுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 | குருநகர் மீனவர்கள் வலி சுமந்து 26வருடங்கள்