Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க்கில் இப்போதும் சிலர் பயங்கரவாத அமைப்புக்களுக்கு பணம் திரட்டுவதாக உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது.

உறுதிப்படுத்தி கைது செய்ய முடியாதவாறு நடைபெறும் பணத்திரட்டல் பயங்கரவாத நடவடிக்கைக்கு என்பதை அடையாளம் காண முடியாதபடி நுட்பமாக நடைபெறுகிறது.

தினசரி 27.000 முதல் 55.000 குறோணர்கள் டென்மார்க்கில் இருந்து வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

பயங்கரவாத நடிவடிக்கைக்கு என்று குறிப்பிடாமல் சேகரிக்கப்பட்டாலும் வருடாந்தம் 10 முதல் 20 மில்லியன் குறோணர்கள் அனுப்பப்படுகிறது.

இந்தச் செய்தி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் கொடுப்போர், வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கை விடுவதாக உள்ளது.

யூலன்ட் போஸ்டனில் மேற்கண்ட செய்தி வெளியிடப்பட்டுள்ளது, டேனிஸ் உளவுப்பிரிவு தலைவர் ஜாக்கப் ஸார்ப் இதைத் தெரிவித்துள்ளார்.

எந்த அமைப்புக்களுக்கு எந்தெந்த நாடுகளுக்கு இப்பணம் போகிறது என்பதை அவர் துல்லியமாக தெரிவிக்கவில்லை.

இது இவ்விதமிருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் சோமாலியா சென்று அல் ஸபாப் அமைப்பில் பயிற்சி எடுத்து வந்தாக கைதான 23 வயது இளைஞன் அப்பாவி என்று அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட இளைஞர் தமது உறவினரை சந்திக்கவே சோமாலியா சென்றதாகவும், அவருக்கும் அல் ஸபாப்பிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கைதான இரு சகோதரருமே சுற்றவாளிகள் என்று 52 வயதுடைய அவர்களின் தந்தை கூறினார்.

இந்த இருவரும் எதிர் வரும் யூன் 25 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

வேறு நாடுகள் சென்று பயங்கரவாத எத்தனங்களில் ஈடுபடுவோரை சந்திப்பது பெரும் குற்றம் என்பதற்கு இந்த வழக்கு நல்லதோர் முன்னுதாரணமாக அமையுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to டென்மார்க்கில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு பணம் சேர்க்கிறார்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com