Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னைய காலங்களுடன் ஒப்பிட்டால் புற்றுநோய் உலகளவில் இரட்டிப்பாக அதிகரித்து செல்வதாக உலக சுகாதார தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார தாபனத்தின் ஐ.ஏ.ஆர்.சி பிரிவினர் பிரான்வில் இருந்து மேற்கொண்ட ஆய்வறிக்கையே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் புற்று நோயின் உலகளாவிய பரம்பலும், போக்கும் எப்படியாக அமையுமென வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை 75 வீத அதிகரிப்பு இருக்குமென தொவித்துள்ளது.

பொதுவாக வளர்ச்சியடையாத அல்லது அபிவிருத்தி அடைந்து வருவதாக கூறப்படும் ஏழ்மை நாடுகளில் இதனுடைய தாக்கம் கட்டுமீறி போகப்போகிறது.

சரியான ஆரோக்கிய உணவை உண்ண இயலாமை, அதற்கான வழிகாட்டல், பொருளாதார வசதிகள் இன்மை, தேகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பயிற்சிகள் குறைவு போன்ற பல காரணிகள் கீழை நாடுகளில் புற்றுநோயின் வேகத்தை இரட்டிப்பாக்கி வருகின்றன.

அதேவேளை மேலை நாடுகளிலும் ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உண்டு, தேகப்பயிற்சி செய்யாமல் இருப்போர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது.

0 Responses to புற்று நோய் உலக மட்டத்தில் இரட்டிப்பாக அதிகரித்துச் செல்கிறது..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com