திமுக தலைவர் கருணாநிதியின் மவுனமும் ஒற்றைச் சொல்லும் கூட நாட்டின் அரசியலை தீர்மானிக்கக் கூடியது என்று கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழி புகழாரம் சூட்டினார்.
திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது:
இந்திய அரசியலை நிர்ணயிக்கக் கூடியவர் கருணாநிதி. 1969-ல் இருந்து குடியரசுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் கருணாநிதி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதையும் முதலில் கருணாநிதியிடம்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஆலோசனை கேட்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசும்போது பழைய விவகாரங்களைப் பேசி, சிறிது மெüனம் காத்தார். அதுவே பெரிய விவகாரமாக நாடு முழுவதும் அலசி ஆராயப்பட்டது என்றால் அவரின் மெளனமும், ஒற்றைச் சொல்லும்கூட நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கிறது காந்தி, மண்டேலா, அம்பேத்கர், பெரியார், அண்ணா வழியில் தன்னலமற்று உழைக்கும் தலைவர் கருணாநிதி என்றார் கனிமொழி.
இவ்விழாவில் பாரதிதாசன், கருணாநிதி எழுதிய பாடலுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கருணாநிதி, துணைவியார் ராசாத்தியுடன் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து ரசித்தார். திமுக நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 Responses to கருணாநிதி ஒரு மவுனப்புயல் கனிமொழி கூத்து