திமுக தலைவர் கலைஞர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
34 இடங்களில் மோனோ ரயில் நிலையங்கள் என்று ஒரு நாளேட்டிலும், 20 இடங்களில் என்று மற்றொரு நாளேட்டிலும் செய்தி வெளிவந்திருக்கிறது. மோனோ ரயில் திட்டத்தைவிட மெட்ரோ ரயில் திட்டம்தான் சிறந்தது என்று ஆதாரங்களோடு மத்திய அதிகாரி ஸ்ரீதரன் போன்றவர்கள் அறிக்கை விடுத்தும் கூட, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஏற்கக் கூடாது என்ற ஜெயலலிதாவின் வழக்கமான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு திடீரென கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அதில் அனுமதி மறுக்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்ட பிறகும்கூட, நூலக அதிகாரிகள் அரங்கத்திற்குள் வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்.
தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. வெப்பம் தாங்காமல் தாவரங்கள் மாண்டு மடியும் சித்திரைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். மலேசியத் தமிழ் இலக்கிய கழகம் இந்த உண்மையை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு கூறியுள்ளார்.
சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்! கலைஞர் கண்டனம்!
பதிந்தவர்:
தம்பியன்
16 June 2012



0 Responses to சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வெளியேற்றி கதவை பூட்டி இருக்கிறார்கள்! கலைஞர் கண்டனம்!