Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ லண்டன் வருவதை பிரித்தானிய அரசாங்கம் விரும்பவில்லை என்றும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசு மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா ஒரு சுதந்திரமான நாடு. அங்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

இந்தவகையில், ராஜபக்சவின் லண்டன் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மாறாக, பிரித்தானிய அரசின் உயர் மட்டச் சந்திப்புகளுக்கான அனுமதிகள் எதையும் ராஜபக்சவினால் பெறமுடியவில்லை என்று பிரித்தானிய அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனும், சிறிலங்கா அதிபரும், ஏனைய நாடுகளின் அரசுத் தலைவர்களோடு- ஒரே அறையில் நடைபெறும் விழாவில் பங்கெடுப்பர்.

ஆனால் தனிப்பட்ட சந்திப்புகள் எதுவும் இடம்பெறாது.

எவ்வாறாயினும் அத்தகைய சந்திப்பு இடம்பெறும் சூழல் உருவானால் கூட, அது ‘கடுமையான‘தொன்றாகவே இருக்கும்.

சிறிலங்கா அதிபருடன் லண்டன் வந்துள்ள ஒரே ஒருவரை சந்திப்பதற்கு மட்டுமே பிரித்தானிய அரசு இணங்கக் கூடும்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கக் கூடும்.

உண்மையில் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை பிரித்தானிய அரசாங்கம் விரும்பவில்லை.

கொமன்வெல்த் செயலகமே அவரை தமது விழாவுக்கு அழைத்துள்ளது.

இந்தவிழாவுக்கு ராஜபக்சவை அழைப்பது பொருத்தமா என்பது தொடர்பாக கொமன்வெல்த் செயலகத்துக்கும், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகமும் நீண்ட விவாதங்களை நடத்தியிருந்தன.

கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, 2010இல் ராஜபக்ஷ லண்டன் வந்தபோது நிகழ்ந்ததை அறிந்தேயிருந்தார்.

ஆனாலும் அடுத்த கொமன்வெல்த் தலைவர்கள் மாநாடு சிறிலங்காவில் நடைபெறவுள்ளதால் அவரை விலக்கி வைக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார் என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

0 Responses to மகிந்தவின் வருகையை விரும்பாத பிரித்தானியா | உயர்மட்டச் சந்திப்புகளும் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com