ஒடிசா மாநில அரசை போன்று தமிழக அரசும், அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்த தடைவிதிப்பது குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பொறுத்தவரையில் அலுவலக நேரங்களில் ஊழியர்கள் கம்ப்யூட்டரிலுள்ள இணையதளங்கள் மூலம் பொழுது போக்குவது உட்பட பல்வேறு செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசு வேலை தாமதப்படுவதுடன், அரசின் செலவினமும் அதிகரித்து வந்தது.
ஓடிசா மாநில தலைமைச்செயலகத்தில் உள்ள துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட கம்ப்யூட்டரில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தி வந்தனர். இந்த வகை இணையதளங்களை பார்வையிடவும், பயன்படுத்தவும் அம்மாநில அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் பார்வைக்கும் ஓடிசா மாநில அரசின் தடை உத்தரவு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அரசு அலுவலகங்களிலும் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் போன்ற இணையதளங்களை பயன்படுத்தவும் தடைவிதிப்பது குறித்தும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் பயன்படுத்த தடை? அதிகாரிகள் ஆலோசனை!
பதிந்தவர்:
தம்பியன்
15 June 2012



0 Responses to தமிழக அரசு அலுவலகங்களில் பேஸ் புக், டிவிட்டர், யூடியூப் பயன்படுத்த தடை? அதிகாரிகள் ஆலோசனை!