தமிழீழத் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, சர்வமத வழிபாட்டு விழிப்புணர்வுப் போராட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாளை, நாளை மறுதினம், அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, தென்னாபிரிக்கா, தமிழகம், அவுஸ்திரேலியா என தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தமிழீழத் தாயகத்திலும், சிறீலங்காவிலும் இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மக்களின் மதச்சுதந்திரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் எதிராக, சிங்கள பௌத்த இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் கவனத்தில் கொண்டு பிரார்த்தனையுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்த சர்வமதப் பிரார்த்தனையில் எம்மவர்கள் எல்லோரும் பங்கு கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர்களின் ஒருவரான கலாநிதி ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் தமிழீழ அரசாங்கத்தின் சர்வமத வழிபாட்டு ஒன்றுகூடல்கள் ஆரம்பம்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 June 2012



0 Responses to உலகளாவிய ரீதியில் தமிழீழ அரசாங்கத்தின் சர்வமத வழிபாட்டு ஒன்றுகூடல்கள் ஆரம்பம்!