மயிலாடுதுறையில் இந்து மக்கள் முன்னணி தலைவர் பண்ணை சொக்கலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை ஆதீனத்தின் 293வது பட்டமாக நித்யானந்தாவை நியமிக்க கூடாது. அதனை திரும்ப பெற வேண்டும் என்று 13 ஆதீனங்கள் தீர்மானம் போட்டு அனுப்பிய போது ஆதீனங்களை நித்யானந்தா அவதூறாக பேசி வந்தார்.
ஆதீனமாக இருக்க தகுதியற்ற, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர் என்ற வகையிலும், செய்தியாளர்களை தாக்கிய வகையிலும் கர்நாடக அரசு நித்யானந்தாவை கைது செய்தது.
மேலும் அவரது ஆசிரமத்தை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து சோதனை செய்தும் அங்கிருந்த பொருட்களை கைப்பற்றியும் வருகிறது. நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நுழையக் கூடாது என்று நீதி மன்றமும் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசை இந்து மக்கள் முன்னணி பாராட்டுகிறது. நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது இளைய மடாதிபதி பட்டத்தை ரத்து செய்து மதுரை மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இளைய ஆதீனம் தவறு செய்தார் அவரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு முன் உதாரணம் உண்டு. ஏற்கனவே திருவாவடுதுறையில் இளைய ஆதீனமாக இருந்த காசி விஸ்வநாத பண்டார் சன்னதி எனப்படும் குமரேசன் ஆதீனத்தை கொல்ல முயன்ற வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகவே எல்லோராலும் வெறுக்கப்படும், குற்றப்பிண்ணனி உள்ளவரும் ஓழுக்கக்கேடு நிறைந்தவருமான நித்யானந்தாவை உடனடியாக இளைய மடாதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும். இனிமேலும் மதுரை ஆதீனம் மவுனமாக இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டு: இந்து மக்கள் முன்னணி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 June 2012



0 Responses to நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டு: இந்து மக்கள் முன்னணி