தமிழீழ விடுதலைப் போரில் முதற் பலியான தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக கழகங்களுக்கு இடையில் நடத்தப்படும் ‘பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான’ உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றாவது வருடமாக இம்முறையும், ரொறன்ரோவில் நடைபெற்றது.
தமிழ் இளையோர் அமைப்பும், கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினாலும் இணைந்து, தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு நாளான ஜூன் 17 ஆம் நாளான நேற்று சனிக்கிழமை ‘சில்வர் ஸ்பிரிங்’ விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது.
தமிழீழத் தேசியக்கொடி மற்றும் கனடியத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ரொறன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
விறுவிறுப்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், இத்துடன் பெருந்தொகையான அளைவில் இளையோர்களும் இதில் கலந்துகொண்டனர்.
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவான கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த உதைபந்தாட்டப் போட்டி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
19 June 2012



0 Responses to தியாகி பொன் சிவகுமாரனின் நினைவான கனடியத் தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த உதைபந்தாட்டப் போட்டி