மதுரை ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கோரி தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், மதுரை மாவட்டத் தலைவர் எம்.சோலைகண்ணன் உள்ளிட்டோர் அளித்தனர். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியது:
மதுரை ஆதீனம் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது. திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடம் இப்போது குற்றப்பின்னணி உள்ளவர்களின் புகலிடமாக இருந்து வருகிறது. இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தரையும் அவரை நியமித்த அருணகிரி நாதரையும் மடத்தில் இருந்து நீக்க வேண்டும். தமிழுக்கும், சைவத்துக்கும் அடையாளமாகத் திகழும் புதியவர் ஒருவரை ஆதிமாக நியமிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் நித்தியானந்தர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் வெளியே வந்துள்ளார். வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர் மதுரையில் ஒளிந்து கொண்டுள்ளார். மதுரை ஆதீன விவகாரங்களில் முதல்வர் தலையிட முடியாவிட்டாலும் அங்கிருந்து கிரிமினல்களை நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.
நித்தியானந்தரை நீக்கும் வரை அறவழியிலும், சட்ட வழியிலும் எங்களின் போராட்டம் தொடரும். பல்வேறு வடிவிலான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.



0 Responses to நித்தியை நீக்கும் வரை போராட்டம் தொடரும்!