முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு திண்டுக்கல்லில் உள்ளது. இந்த வீட்டிற்கு இன்று காலை 10 மணியளவில் டிஎஸ்பி சுருளிராஜன் தலைமையில் திடீரென்று 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர்.
வீட்டில் சோதனை செய்யவேண்டும் என்று போலீசார் கூறவும், பெரியசாமி தற்போது இங்கு இல்லை; அவர் சென்னையில் இருக்கிறார் என்று வீட்டினர் கூறினர்.
இதனை நம்பாத போலீசார் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். எதற்காக சோதனை செய்கி றோம் என்று கூறவேயில்லை.
ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரன். இவரை நேற்று விசாரணை என்கிற பெயரில் போலீசார் திடீரென கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீ சார்.
இந்நிலையில் ஐ.பெரியசாமியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்ததால், பெரியசாமையை கைது செய்யும் நோக்கில் தான் போலீசார் வந்துள்ளனர் என்ற தகவல் பரவியது.
இதையடுத்து முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், நகர செயலாளர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர் விஜயன்,மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர சுரேஷ், முன்னாள் பார்கவின்சில் தலைவர் ரவிச்சந்திரன்ன் மற்றும் தேவராஜ் உள்பட 500க்கும் மேற்பட்ட கட்சியினர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து முகாமிட்டனர்.
இதையடுத்து சோதனை நடத்த வந்த போலீசார் வீட்டை விட்டு சென்றனர். ஆனாலும் பதட்டம் குறையாததால், கட்சியினர் வீட்டி வாசலிலேயே அமர்ந்துள்ளனர்.
-சக்தி
மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியை கைது செய்ய முயற்சி? | திமுகவினர் கொந்தளிப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 June 2012
0 Responses to மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமியை கைது செய்ய முயற்சி? | திமுகவினர் கொந்தளிப்பு