Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தே.மு.தி.க., சார்பில், பெட்ரோல் விலை உயர்வில் மக்கள் விரோதப்போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தாக்கியும், அறிவுரை கூறியும் பேசியதாவது:

‘’தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க; மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.

சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ’உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு.

எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்’ என்கிறார். 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா (ஜெயலலிதா) ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!

சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றபோது, 32 பேரை அனுப்புனீங்க. இன்று புதுக்கோட்டையில் நான் ஒரு ஆள் தான். 52 பேரை அனுப்புறீங்க. ஜெயலலிதாவுக்கு பயம். எனக்கு துளிகூட பயம் கிடையாது.

நிலம் மூலம் கொள்ளையடித்தவர்களை உள்ளே தள்ளியுள்ளீர்கள். அதே நிலை தான் நாளை உங்களுக்கும் திரும்பும். இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா? நல்லவங்க யாரும் ஆட்சி செய்யலை. கெட்டவங்க தான் ஆட்சி செய்றாங்க.

2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோது யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூமி அதிர்வு, நில அதிர்வு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்காது’’ என்று பேசினார்.

0 Responses to இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க | விஜயகாந்த் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com