மியன்மார் நாட்டின் ஜனநாயக உரிமைப் போராட்டக்காரர் ஆங் சாங் சுகி அம்மையார் ஐரோப்பாவிற்கான சுற்றுப்பயணத்தை மேற் கொண்டுள்ளார்.
மேலை நாடுகள் தமது முதலீடுகளை மியன்மாரில் செய்வது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் சிறப்பாக மியன்மார் எரிவாயு, ஓயில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முதலீடுகள் அவசியம் என்றும் கூறினார்.
சுவிற்சாலாந்தை வந்தடைந்துள்ள அவர் தமது நாட்டில் வேலையற்ற இளைஞரின் வேலை வாய்ப்பு, கல்விக்கான உதவிகளை வழங்கி நம்பிக்கை வரட்சியில் இருந்து இளையோரை விடுவிக்க உதவும்படியும் கேட்டார்.
நோபல் பரிசை பெற நோர்வே வரும் ஆங் சாங் சுகி அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார்.
ஆட்டம் காணத்தொடங்கிவிட்ட நொக்கியா
பின்லாந்து நாட்டின் நொக்கியா நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 10.000 தொழிலாளருக்கு வேலை நீக்கக் கடிதத்தை வழங்க இருக்கிறது.
எதிர்வரும் 2013 ற்குள் இந்த வேலை நீக்கங்கள் நடைபெற்று முடிந்துவிடும், பின்லாந்தில் மட்டும் 3800 பேருக்கு வேலை நீக்கக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.
இதபோல நொக்கியாவின் வார்த்து ஆடம்பர தொலைபேசி நிலையமும் மூடப்படுகிறது இதனால் 850 பேர் வேலை இழக்கவுள்ளனர், அத்துடன் இவர்களுடைய சலோ தொழிற்சாலையும் விற்பனையாகவுள்ளது.
ஈராக்கில் 84 பேர் மரணம்
கடந்த டிசம்பர் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து புறப்பட்ட பின்னர் மறுபடியும் பாரிய இரத்தக் கடலில் குளித்துள்ளது ஈராக்.
அங்கு நடைபெற்ற பல்வேறு குண்டுத் தாக்குதல்களிலும் சிக்குப்பட்டு மொத்தம் 83 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
தலைநகர் பாக்தாத்தில் மட்டும் மொத்தம் பத்து வரையான பயங்கரத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக மத விடயங்களுக்காக பொது மக்கள் குழுமும் இடங்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
லுன்பெக்கில் 600 பேருக்கு வேலை நீக்கம்
மருந்து தயாரிப்பு நிறுவனமான லுன்பெக் ஐரோப்பாவில் மட்டும் 600 பேருக்கு வேலை நீக்கக் கடிதங்களை வழங்கவுள்ளது.
லுன் பெக் நிறுவனம் தயாரிக்கும் புதுவகை மருந்துகளுக்கு ஐரோப்பிய சந்தையில் அனுமதி மறுக்கப்படுவதும், ஐரோப்பிய வர்த்தக சட்டங்கள் இறுக்கமாக இருப்பதும் ஐரோப்பிய சந்தையை லுன்பெக் புறந்தள்ள காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
தான்சானியாவில் எரிவாயு கண்டு பிடிப்பு
நோஸ்க் எரிபொருள் பகாசுர நிறுவனமாகிய நோஸ்க் ஸ்ரேற் ஓயில் கிழக்கு ஆபிரிக்க தான்சானிய கடற்பகுதியில் செய்த ஆய்வில் பெருந்தொகை எரிவாயு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளது.
வடக்கு நோர்வேயில் உள்ள எரிவாயு வளங்களை விட அதிக வளத்துடன் தன்சானிய எரிவாயு அரக்கன் மண்டிக்கிடக்கிறது.
முதற்கட்டமாக ஒரு பில்லியன் கன அடி அளவு கொண்ட எரிவாயுவை கண்டு பிடித்துள்ளது நோஸ்க் நிறுவனம்.
இந்த எரிவாயு ஏழ்மை மிக்க தன்சானியாவின் பொருளாதாரத்தில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
அலைகள்.



0 Responses to ஆங் சாங் சுகி ஐரோப்பா சுற்றுப்பயணம்